ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை - சூப்பர் ஸ்நாக்ஸ்
ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை - மருத்துவ குணமுள்ள சூப்பர் ஸ்நாக்ஸ். தேவையானவை ராகி பவுடர் -அரை டம்ளர் பார்லி பொடித்த்து -அரை டம்ளர் உளுந்து வ...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_1492.html
ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை -
மருத்துவ குணமுள்ள சூப்பர் ஸ்நாக்ஸ்.
தேவையானவை
ராகி பவுடர் -அரை டம்ளர்
பார்லி பொடித்த்து -அரை டம்ளர்
உளுந்து வறுத்து பொடித்தது -ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு -ஒரு மேசை கரண்டி
மிளகு கொர கொரப்பாக திரித்தது -ஒரு தேக்கரண்டி
ஓமம் -அரைத்தேக்கரண்டி
இட்லி சோடா மாவு -அரை சிட்டிக்கை
கருஞ்சீரகம் -அரை தேக்கரண்டி
உப்பு -ருசிக்கு தேவையான அளவு
பட்டர் -ஒன்னறை மேசைகரண்டி
கடலை பருப்பு -ஒரு மேசைகரண்டி
செய்முறை
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ராகி மாவு, அரிசிமாவு, பார்லி உளுந்து பொடித்தது, மிளகு , கருஞ்சீரகம், ஓமம்,பட்டர் , உப்பு , இட்லி சோடா அனைத்தையும் சிறிது நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான டயட் தட்டை ரெடி
20 தட்டைகள் வரும்.
Post a Comment