பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்
பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் தொடர்ச்சி… சுகப் பிரசவம் கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது வேதனை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படு...

தொடர்ச்சி…
சுகப் பிரசவம் கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது வேதனை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுவார்கள். அதிக வலி இல்லாது சுகப் பிரசவமாக முன்னேற்பாடாகச் சில இயற்கை மூலிகளைகளைக் கொடுக்கலாம். இதைப் பிரசவ காலத்திற்கும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே சாப்பிட ஆரம்பிக்கலாம். இதனால் எந்த வித கெடுதியும் ஏற்பட்டு விடாது. மூலிகைகள் என்றதும் அவை கனடாவில் கிடைப்பதில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். இங்குள்ள சில சீன மருந்துக்கடைகளில் இவை கிடைக்கின்றன. அதுபோன்றே ஒரு சில தமிழ்க் கடைகளிலும் கிடைக்கின்றன. நமது தாயகத்தில் ஒரு சில மூலிகைகள் மற்றும் கீரை, கிழங்கு வகைகள், துளசி, வேப்பிலை கத்தாழை, முருங்கை மரவேர்கள் போன்றவை எளிதில் கிடைக்கும். கனடாவில் அவை சாத்தியமில்லை, பயிரிடவும் முடியாது. எனினும் நமது வீட்டில் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் சில மளிகைப் பொருட்கள் இதை ஈடுசெய்ய முடியும் என்பதால் கூடுமான வரை அவற்றைப் பற்றிய தகவல்களையே இயற்கை மருத்துவ முறைக்கு ஏற்றவாறு உபயோகித்து தயாரிப்பதும் எளிதாகும்.
சிறிதளவு சீரகத்தை மைபோல் மிக்ஸியில் அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து காலை மாலை இரு வேளையாக மூன்று நாள் சாப்பிட வேண்டும். அடுத்து மூன்று நாள் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று நாள் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் இடைவெளி விட்டுப் பிரசவமாகும் வரை சாப்பிட்டு வர சுகப் பிரசவமாகும்.
ஆமணக்கு எண்ணெய் 20 கிராம், பிரண்டை 10 கிராம் எடுத்து, எண்ணெயில் பிரண்டையைத் தட்டிப் போட்டு சலசலப்பு சத்தம் அடங்கும் வரை காய்ச்சி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை ஏழாம் மாதமும், ஒன்பதாம் மாதமும் ஒவ்வொரு முறை வீதம் ஒரு ஸ்பூன் உள்ளுக்கு அருந்தினால் போதும். சுகப்பிரசவம் எளிதாய் அமைந்துவிடும்.
பிரசவ வேதனை ஏற்படும் சமயம் கொஞ்சம் எடுத்து வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி, காயமாக தயாரித்து உள்ளுக்கு கொடுத்தால் போதும், சுகப்பிரசவமாகும்.
வலிப்பு ஒரு சில பெண்களுக்குப் பிரசவ காலம் நெருங்கும் போது வலிப்பு ஏற்படும். இதை கவனிக்காது விட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தில் பிரச்சனை ஏற்படக்கூடும்.
லவங்கப் பட்டையை நன்றாக இடித்துத் தூளாக்கி மெல்லிய துணியில் சலித்துக்கொள்ளவேண்டும். அதே அளவு வெங்காயத்தையும் பொறித்து அவ்வாறே தூளாக்கி சலித்துக் கொண்டு இரண்டையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்தச் சூரணத்தை இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் போதும். வலிப்பு நீங்கி விடும். வழக்கமாக வலிப்பு ஏற்படும் பெண்களுக்கு முன்னெச்சரிக்கையாக இந்தச் சூரணத்தை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பத்து நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வலிப்பு ஏற்படாது.
பிரசவித்தபின் ஏற்படும் தொல்லைகள் பிரசவித்த பிறகும் எச்சரிக்கையுடன் ஒரு தாய் கவனமாக இருக்க வேண்டும். சீதளம் ஏற்பட்டால் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிட வாய்ப்புகள் உண்டு. அதனால் பிரசவித்த தாய்மார்களுக்கு ஆகாரத்துடன் அதிக அளவு வெள்ளைப் பூண்டை ரசம் அல்லது குழம்பு வைத்து கொடுத்து வர வேண்டும். வெள்ளைப் பூண்டைத தனியாக அரைத்து உள்ளுக்குக் கொடுப்பதை விட அப்பெண்ணுக்குக் கொடுக்கும் ஆகார வகைகளில் அதிகம் சேர்த்துக் கொடுத்தால் எந்த வித வியாதியும் வராது. மேலும் வாய்வு தொல்லையும் ஏற்படாது. தாய்க்கு மட்டுமின்றி, பால் குடிக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் இது நல்ல பலன்களைத் தரும். இருவருக்குமே எளிதில் சீரண சக்தியை அளிப்பதோடு இரத்தத்தையும் சுத்தப்படுத்தி, தாயின் பால் சுரப்புக்கும் மிகவும் நல்லதாகும்.
கருப்பையில் அழுக்கு பிரசவித்த பின் கருப்பையில் அழுக்கு நின்று விடுவது உண்டு. முள்ளுக் கீரைத்தண்டு, நாயுருவி, மூங்கில் இலை, வாழைச் சருகு இவற்றை வகைக்கு 25 கிராம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி, கஷாயமாக்கி, அதில் ஒரு நாளைக்கு இருவேளை வீதம் கால் டம்ளர் அளவுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட கருப்பையில் தேங்கும் அசுத்தம் வெளியேறிச் சுத்தமடையும்.
கருப்பையில் ரணம், வலி பிரசவித்தபின் கருப்பை தன் அளவுக்குச் சுருங்கிவிட நேரும். அச்சமயத்தில் வலி ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால் இந்த வலி குறையும் . ஒரு சிலருக்கு குறையாது, வலியும் தாங்க முடியாததாக இருக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப்பத்திரி, லவங்கப்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து லேசாக வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிறு வலி குணமாகும்.
கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் இரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அச்சமயத்தில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில் அதே அளவு விளக்கெண்ணையும் சேர்த்து, காய்ச்சி வடித்து அத்தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். இரத்தப் போக்கும் நிற்கும். ஒற்றைத் தலைவலி கூட பிரசவமான பிறகு ஒரு சிலருக்கு ஏற்படுவதுண்டு. அப்போது இஞ்சிச் சாற்றுடன் அதே அளவு நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி, அந்த தைலத்தைத் தலைக்கு தடவி சீவி வரலாம். தலை வலி குணமாகும்.
Post a Comment