பேரிச்சை சட்னி--சட்னிகள்
பேரிச்சை சட்னி பேரிச்சை - கொட்டை நீக்கியது 5-6 புளி - ஒரு நெல்லிக்காய் அளவு துருவிய வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி - 1 டீஸ்பூன...
பேரிச்சை சட்னி
- புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
- பேரிச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
- அடிகனமான வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.
- வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடுங்கள்.
- கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித்ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.
- இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
- வடஇந்திய உணவுகளுக்கு dressing ஆகவும், சமோசா போன்றவற்றிருக்கு sauce மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
- இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு: கூட வருத்து திரித்த சீரகமும் சேர்த்து , கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து அரைத்தும் பயன்படுத்தலாம்.
Post a Comment