மிக்சி டிப்ஸ் - mixe tips 1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்தத...

மிக்சி டிப்ஸ் - mixe tips
1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஓரளவிற்கு எல்லாம் வந்து விடும். அதற்கும் மேல் பிள்ளைகளின் பால் பாட்டில் கழுவும்பிரஷ்
கொண்டு கழுவினால் சுத்தமா சூப்பரா கழுவி எடுத்து விடலாம்.
2. மிக்சியில் காரமான பொருள் அரைத்து விட்டு உடனே ஸ்வீட்டுக்கு தேங்காய் (அ) முந்திரி அரைக்கனும் என்றால் முதலில் மிக்சியில் கொஞ்சம் சோப், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுங்கள் அடுத்து மறுபடி தண்ணீர் போட்டு நன்கு கழுவி விட்டு ஒரு டேபுள் ஸ்பூன் மைதா (அ) அரிசி மாவு போட்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைத்து கீழே ஊற்றி விட்டு அரைத்தால் அந்த கார வாடை அடிக்காது.
3. அரைக்கும் போது மிக்சி சூடாகமல் இருக்க கொஞ்சமா ஐஸ் வாட்டர் ஊற்றி அரைக்கவும்.
4. இல்லை பிரெட் துண்டுகளை போட்டு நன்கு ஓடவிட்டு எடுத்து விட்டு கூட அரைக்கலாம்
Post a Comment