இனாமாக கிடைக்கிறது…பெட்டகம் சிந்தனை

ஒரு ராஜாவிடம், இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒரு நாள், இரண்டு புலவர்களையும் கூப்பிட்டு, “உங்களுக்கு தினமும் நாலுபடி பால் வேண்டுமா அல்லது மாட...

ஒரு ராஜாவிடம், இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒரு நாள், இரண்டு புலவர்களையும் கூப்பிட்டு, “உங்களுக்கு தினமும் நாலுபடி பால் வேண்டுமா அல்லது மாடும், கன்றும் வேண்டுமா?’ என்று கேட்டான் ராஜா. “நாங்கள் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கேட்டு வந்து சொல்கிறோம்…’ என்றனர். வீட்டுக்குப் போயினர் புலவர்கள். மனைவியிடம், “பால் வேண்டுமென்று சொல்லவா, மாடு வேண்டுமென்று சொல்லவா?’ என்று கேட்டார் ஒரு புலவர். “தினம், நாலு படி பால் கொடுக்கச் சொல்லுங்கள்…’ என்றாள் ஒரு புலவரின் மனைவி. மற்றொரு புலவரின் மனைவி, “மாடும், கன்றுமே கொடுக்கச் சொல்லுங்கள்…’ என்றாள். அதன்படியே ராஜாவும் உத்தரவு போட்டான். அதன்படி, ஒரு புலவரின் வீட்டுக்கு தினமும், நாலு படி பால் வந்தது. புலவரின் மனைவி தினமும் பால், தயிர், வெண்ணை, பால் பாயசம் என்று விதவிதமாக சாப்பிட்டாள். மற்றொரு புலவரின் வீட்டுக்கு மாடும், கன்றும் வந்தன; புலவரின் மனைவிக்கு சந்தோஷம். உடனே, மாட்டுக்கு ஒரு கொட்டகை போடச் சொன்னாள். தினமும் அதற்கு வைக்கோல், புல் கட்டு வாங்கிப் போட வேண்டியிருந்தது. தினமும் கொட்டகையை, சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. பால் கறக்க ஒருவனை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. ஒரு நாள் வருவான், ஒரு நாள் வராமலே விட்டு விடுவான். அன்றைக்கு கன்றுக் குட்டிக்கு தான் பால் கிடைக்கும். பால் கறக்க சொம்புடன் போனால், மாடு உதைக்கும். அன்றைக்கு பால் அவ்ளோதான். தினமும் இப்படி மாட்டுடன் போராட வேண்டியிருந்தது. மற்றொரு புலவர் வீட்டுக்கு தினமும், நாலு படி பால் வந்து விடுவதைக் கேள்விப்பட்டு, கணவரிடம், “நீங்களும் ராஜாவிடம் போய் தினமும் பால் அனுப்பச் சொல்லுங்கள்…’ என்றாள்.அதற்கு அந்தப் புலவர், “மீண்டும் ராஜாவிடம் போய் அப்படி கேட்க முடியாது. ஒரு முறை கேட்டபடி அவர் கொடுத்து விட்டார். மீண்டும் போய் அது வேண்டாம், இது வேண்டும் என்று சொல்ல முடியாது…’ என்று சொல்லி விட்டார். இப்போது புலவரின் மனைவி மாட்டையும் கட்டி, சாணியையும் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு புலவரின் மனைவியோ தினமும், நாலு படி பால் வாங்கி இஷ்டம் போல் பயன்படுத்துகிறார். அதாவது, இனாமாக கிடைக்கிறது என்றாலும், நாம் அதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் முன்னதாகவே தீர்மானம் செய்வது நல்லது.

Related

நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா -- பெட்டகம் சிந்தனை .....

நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க. “நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”. நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்ட...

உலகப் பழமொழிகள்--பெட்டகம் சிந்தனை

பழமொழிகள் உலகப் பழமொழிகள் * துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது. ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும். - சீன‌ப்...

நபியவர்கள் கூறினார்கள்....பெட்டகம் சிந்தனை

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 3:24:42 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,327

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item