தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 1/4 கிலோ புளி - தேவையான அளவு மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு காய்ந்த ரொட்டித்தூள் - 1...

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
புளி - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த ரொட்டித்தூள் - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
தனியா பொடி - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - தேவையான அளவு
செய்முறை:
வெண்டைக்காயின் காம்பு பாகத்தையும் தலைப்பாகத்தையும் வெட்டி எடுக்கவும்.
ஒரு கிண்ணதில் நீர்க்கக் கரித புளித் தண்ணீரோடு உப்பு, மஞ்சள்தூள் போட்டு சூடாக்கவும். பின் அதில் வெண்டைக்காயை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரை முழுவதும் வடித்து ஆற வைக்க வேண்டும்.
பின் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்ப் பொடி,தனியா பொடி,
சமையல் சோடா,உப்பு போன்றவற்றுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைக்கவும்.
வெண்டைக்காயை இந்த மாவில் தேய்த்து பிரட் தூளில் புரட்டி எடுத்து எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சூடான வெண்டைக்காய் பக்கோடா ரெடி
Post a Comment