தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி--காய்கறிகளின் மருத்துவக் குணங்கள்

தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் ...

தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இந்த இரு குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

சுத்தமான இரத்தத்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து உடல் நலப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது.

மலச்சிக்கல், இரைப்பைக் கோளாறுகள், நெஞ்சுவலி, சிறநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை, முகம் கறுப்பாகமாறுதல் போன்றவைகளையும் முள்ளங்கிக்கிழங்கும், அதன் இலைகளும் நன்கு குணப்படுத்திவிடுகின்றன.

மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும்.

பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.

100 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 9.4%ம் மாவுச்சத்து, 3%ம் உள்ளது. மீதியில் சிறிதளவு புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும் (0.4 மில்லி கிராம்), கால்சியமும் (35 மில்லி கிராம்), பாஸ்பரஸும்(22 மில்லிகிராம்) இருக்கின்றன. இதனால் கிழங்கைப் பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி அளவு 17தான். சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகவும் முள்ளங்கிக்கிழங்கு சாப்பிடுவது நல்லது.

மூலநோய் குணமாகக் காலையும், மாலையும் 50 முதல் 100 மில்லி வரை முள்ளங்கிக் கிழங்கின் சாறு அருந்திவர, மூலம் கட்டுப்படும்.

ஒரு கப் முள்ளங்கிக் கீரைச் சாற்றை அருந்தினால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உட்பட அனைத்துச் சிறுநீரகக் கோளாறுகளும் குணமாகும். குணமாகும்வரை தினமும் ஒரு கப் அருந்தி வர வேண்டும்.

மஞ்சள் காமாலை உடனே கட்டுப்பட முள்ளங்கிக் கீரையின் சாற்றை மெல்லிய வெள்ளைத் துணியில் வடிகட்டி, அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். வயதானவர்கள் தினமும் அரைக்கிலோ முள்ளங்கிக் கீரையைச் சேகரித்து இந்த முறையில் அருந்தினால் மிக விரைவில் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணமாகிவிடுவார்கள்.

இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள் (இதயவலி) வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கிக் கிழங்குச் சாறுடன் அதே அளவு தேனையும் கலந்து சாப்பிட வேண்டும். சிறிது உப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். தினசரி மூன்று வேளை இது போல் சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும். இது மிக உயர்தரமான நன்மையைத் தரும் மருத்துவமுறையாகும்.

தோலில் வெண்புள்ளி உள்ளவர்கள் முப்பது முதல் ஐம்பது கிராம் வரை முள்ளங்கி விதையை இடித்து, வினிக்கர் மூலம் பசையாக்கி, வெண்புள்ளி உள்ள இடங்களில தடவவேண்டும். தொடர்ந்து தினசரி தடவினால் இந்த விதைப்பசை தோலின் நிறத்தை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.

படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தவிட்டு நிறமுள்ள புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும். முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.

முள்ளங்கிக் கிழங்கையும், கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான உடல் நலத்துடன் திகழலாம் என்பத நிச்சயம்.

முள்ளங்கியைச் சமைக்கலாமா? முள்ளங்கிக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் வைட்டமின்களும், தாது உப்புகளும் அழிந்துவிடுவதுடன் நோய் எதிர்ப்பு பாக்டீரியாக்களும் கூடவே சிதைந்துபோய் விடுகின்றன.

எனவே, பச்சையான முள்ளங்கிக்துண்டுகளுடன் காரட், பீட்ரூட் துண்டுகளையும் கலந்து, அவற்றில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, உப்பு சேர்த்து, சாலட் போல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியம் கிடைக்கும்.

இதே போல், முள்ளங்கிக் கீரையையும் சமைக்காமல், சிறுதுண்டுகளாக நறுக்கி, பச்சையாகச் சாப்பிடவேண்டும். அல்லது மேற்கண்ட சாலட் (Salad)டில் சேர்த்துக் கொள்ளலாம். கிழங்கைவிடக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகம் உள்ளன. 100 கிராம் கீரையில் கிடைக்கும் கலோரி அளவு 28 ஆகும்.

எனவே, கீரையையும், கிழங்கையும் பச்சையாகவே பயன்படுத்துங்கள். அதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுங்கள்.

தாம்பத்திய வாழ்வில் ஆர்வம் வேண்டுமா? சிறுநீர் நன்கு கழியவும், எரிச்சல் நீங்கவும் சிறுநீரில் கற்கள் சேராமல் இருக்கவும முள்ளங்கிச் சாம்பார் செய்து சாப்பிடலாம். (துண்டுகள், பெரியனவாக வெட்ட வேண்டும்)

வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில தான் முள்ளங்கிக்கிழங்கு கிடைக்கிறது. மற்ற நிறங்களிலும் சில இடங்களில் பயிராகிறது.

இருவகை முள்ளங்கியிலும் மருத்துவக் குணங்கள் ஒரே மாதிரிதான் உள்ளன. நன்கு சாப்பிட்ட திருப்தி வேண்டும் என்பவர்களும், தாம்பத்திய வாழ்வில் அதிக ஈடுபாடு வேண்டும் என்பவர்களும் மட்டும் சிவப்பு முள்ளங்கிக் கிழங்கை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.

புத்தியுள்ள குழந்தைகள் வேண்டுமா? குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உள்ளன.

வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக்கிழங்கைச் சாப்பிடலாம். ஆனால், முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது.


Related

காய்கறிகளின் மருத்துவ குணங்கள் 1535414864200212299

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item