வளமான வாழ்விற்கு உணவே மருந்து அன்னாசி---பழங்களின் பயன்கள்,
நாம் அனைவரும் ருசித்து உண்ணும், இந்நாட்டில் எப்போதும் கிடைக்கும் அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம். மர...


நாம் அனைவரும் ருசித்து உண்ணும், இந்நாட்டில் எப்போதும் கிடைக்கும் அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம்.
மருத்துவத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றம், தொழில் நுட்பத் திறன் மற்றும் மருந்து வகைகள், கண்டுபிடிப்புகள் போன்றவை பல நோய்களை அறவே ஒழித்திடும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை நினைத்து பெருமைப்பட்டாலும் இயற்கையிலேயே, உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் ‘உணவே மருந்து’ என்ற கருத்தில் பழ வகைகளும் முக்கியம் என்பதால் அவற்றை என்றுமே ஒதுக்கக்கூடாது.
எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் அனைத்து மூலப் பொருட்களும் அமைந்திருப்பதோடு, நறுமணமும் இனிய சுவையும் கொண்ட அன்னாசிப்பழத்தின் சிறப்பு சற்று வித்தியாசமானதாகவும் பல வித நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. அன்னாசியின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடான பிரேஸில் ஆகும். 15ம் நூற்றாண்டில் கொலம்பஸ் மூலம் கொண்டுவரப்பட்ட இப்பழம் முதலில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், செல்வந்தர்களின் பழமாக இருந்தது. இப்போது அனைத்து நாட்டிலும் அனைவரும் பெறுமளவில் தாராளமாகக் கிடைக்கின்றது.
100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் வைட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு. எனவே உணவில் சத்துப் பொருட்களை உடனடி ஜீரணமாகச் செய்வதில் அன்னாசிக்கு நிகர் வேறு பழம் கிடையாது. இதன் காரணமாகவே மேல்நாடுகளில் இறைச்சி உணவு சாப்பிடும் அனைவரும், தாங்கள் சாப்பிடும்போது அன்னாசிப் பழத்துண்டுகளையும் சேர்த்து சாப்பிடுவது பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கோழிக்கறியுடன் சேர்த்து சமைப்பதும் உண்டு.
அன்னாசிப் பழச்சாறும் ஜீரணச்சக்தியை விரைவுபடுத்தும் என்பதுடன் சத்துணவு ஆகும். இச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நோயால் அவதிப்பட்டு உடல் பலவீனமானவர்கள் நன்கு உடல் தேற விரைவில் ஆரோக்கியமடைவார்கள். மேலும் இப்பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். குடல் புண்களை அழிக்கும் சக்தியும், நீண்ட நாள் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
உடலில் தோன்றும் மருக்கள் கால்ஆணி ஆகியவற்றுக்கும் அன்னாசிப் பழம் அருமருந்தாகும்.
பாடகர்கள் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். ரத்தசோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது. நாம் கூட அன்னாசிப்பழ ரசம், பாயசம், ஜாம் வைத்து விருந்துகளில் பரிமாறுவது என்பது வழக்கம் தானே. முக்கியமாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களது உணவாக இதை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அவர்களுக்கு அளிப்பதோடு பசியையும் தூண்டும். இவ்வாறாக அன்னாசிப் பழத்தின் பயன் அறிந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் அடிக்கடி உபயோகித்து, வாழ்க்கை வாழ்வதற்கே என்று நலம் பெற பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
2 comments
இவ்வாறாக அன்னாசிப் பழத்தின் பயன் அறிந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் அடிக்கடி உபயோகித்து, வாழ்க்கை வாழ்வதற்கே என்று நலம் பெற பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.//
வளமான வாழ்வுக்கு நல்ல பழக்கம்.
எனக்கு அன்னாசி பழம் மிகவும் பிடிக்கும்.
அதன் பயன்கள் அறிந்து கொண்டேன்.
நன்றி.
Welcome Thanks by A.S. Mohamed Ali
Post a Comment