காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ்...சமையல் குறிப்புகள்
காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ் தேவையானவை சைனீஸ் நூடுல்ஸ் - 2 பாக்கெட் காரட், காப்சிகம், பேபிகார்ன் - 2 கப் (நீள வாக்கில் நறுக்கியது) பச்சை ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_7234.html
காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ்
தேவையானவை
சைனீஸ் நூடுல்ஸ் - 2 பாக்கெட்
காரட், காப்சிகம், பேபிகார்ன் - 2 கப் (நீள வாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினமோட்டா - 1/4 டீஸ்பூன்
வெள்ளை மிளகு பவுடர் - 1/4 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* சைனீஸ் நூடுல்ஸை சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வதக்கவும்.
* அத்துடன் காய்கறி கலவையை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது, மிளகு பவுடர், சோள மாவு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
* வதங்கியதும் அஜினாமோட்டா, சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் வேக வைத்த நூடுல்சை சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
* கடையில் விற்கும் ரெடிமேட் மசாலா நூடுல்ஸ் பாக்கெட் என்றால் நறுக்கிய காய்கறி, வெங்காயம், பச்சை மிளகாயுடன், மசாலா பவுடரை சேர்த்து நெய் விட்டு வதக்கி, வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்துக் கிளறவும். இதற்கு அஜினமோட்டோ சேர்க்கத் தேவையில்லை.
Post a Comment