கவனிங்க...!வீட்டுக்குறிப்புக்கள்
கவனிங்க...! * காய்கறிகளை கழுவிய பிறகு வெட்ட வேண்டும், அப்போதுதான் மண் துகள்கள், அழுக்கு நீங்கும். கிருமிகள் ஓரளவுக்கு அகற் றப்படும். வெட்டி...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_8573.html
கவனிங்க...!
* காய்கறிகளை கழுவிய பிறகு வெட்ட வேண்டும், அப்போதுதான் மண் துகள்கள், அழுக்கு நீங்கும். கிருமிகள் ஓரளவுக்கு அகற் றப்படும். வெட்டிய பிறகு கழுவினால் சத்துப் பொருட்கள் குறைந்து விடும்.
* புழு, பூச்சி தாக்கிய காய்கறியை பாதிக்கப் பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு பயன் படுத்தக் கூடாது. முழுவதையும் பயன் படுத்தாமல் இருப்பதே நல்லது.
* கண் கரிக்காமல் வெங்காயம் வெட்ட வேண்டுமானால், அதன் மூக்குப் பகுதியை அகற்றிவிட்டு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு வைத்திருந்து பிறகு வெட்டி பயன்படுத்தலாம். அதேபோல மூக்கு அரிந்த வெங்காயத்தை அடுப்பு வெப்பத்தில் லேசாக வைத்திருந்து பிறகு அரிந்து கொள்ளலாம்.
* சமையலில் உப்பு கூடினால் ஒன்றிரண்டு உருளைக் கிழங்கை வெட்டிப் போட்டு வேக வைத்துக் கொள்ளலாம். கிழங்கு சேர்க்காத குழம்பு எனில் ஒரு எலுமிச்சையை பிழிந்து ஊற்றலாம். காரம் கூடினாலும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
* எப்போதுமே சாப்பிட்டபின் ஒன்றிரண்டு சீரகத்தை வாயில் போட்டுக் கொள்வது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
* சாப்பிட்ட பிறகு சூடாக டீ, காபி போன்ற பானம் பருகினால் இதயத்திற்கு நல்லது.
----------------------------------------------------------------------------------------
Post a Comment