வெள்ளரி சட்னி:--சமையல் குறிப்புகள்
வெள்ளரி சட்னி: தேவை: சுத்தப்படுத்திய வெள்ளரி சதைப்பகுதி - 1 கப், கெட்டி தக்காளிச் சாறு - 1 மேஜைக்கரண்டி, வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண...

வெள்ளரி சட்னி:
தேவை:
சுத்தப்படுத்திய வெள்ளரி சதைப்பகுதி - 1 கப், கெட்டி தக்காளிச் சாறு - 1 மேஜைக்கரண்டி, வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி, துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி, பச்சை மிளகு - 1 தேக்கரண்டி, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் - தாளிதம் செய்ய.
செய்முறை:
தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி துண்டாக்கிய வெள்ளரி, வறுத்த வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், மிளகு, தக்காளிச் சாறு, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் இட்டு அரைக்கவும். தாளிதம் செய்யவும். மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.
என்ன பயன்?
உடனடியாக தாகம் தீர்க்கும்.குளுமையை அள்ளிக் கொடுக்கும். கோடையிலே ஏறக்குறைய அனைவருக்கும் ஏற்படும் நீர்க்கடுப்புக்கு நல்ல தீர்வு. பொதுவாக கோடை நாட்களிலே எண்ணெய்ப் பண்டங்களை சாப்பிடுவது அஜீரணத்துக்கு வழி வகுக்கும். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நரம்புகளை பலப்படுத்தி, சோர்வு மேலிடாமல் தடுத்து, நாள் முழுவதும் துள்ளலுடன் ஓடி ஆட வைக்கும் இந்த வெள்ளரி.
Post a Comment