சலனம் -- கவிதைத்துளிகள்
சலனம் மௌனமாய் இருக்க மனதும் ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_1601.html
சலனம்
மௌனமாய் இருக்க மனதும்
இடம் கொடுக்க வில்லை....!
விலகி செல்ல எனது பாதையும்
எனக்கு தெரியவில்லை....?!
********
எந்த நிமிடம் என் மனதினுள் நுழைந்தாய்?
நட்பு என்ற அடையாளத்துடன் நுழைந்து
என் உணர்வோடு கலந்தது ஏன்?
தெளிந்த என் மன நீரோடையில்
முதல் கல் எரிந்தது நீ..... ஏன்?
கலங்கிய நீரில் நான்
கரைந்து போகவா...இல்லை
துடித்து சாகவா.....? காரணம்
சொல், விட்டு விடுகிறேன்
நிரந்தரமாக என் மன கூட்டில் இருந்து...!
Post a Comment