பித்தத்தைப் போக்கும் லைம் ஜிஞ்சர் மிக்சட் பானம்--இயற்கை வைத்தியம்
பித்தத்தைப் போக்கும் லைம் ஜிஞ்சர் மிக்சட் பானம் நமக்கு பித்தம் ஏற்பட்டால் அப்பப்பா, எத்தனை தொல்லை! வாந்தி குமட்டல், தலைச்சுற்றல், வயி...

பித்தத்தைப் போக்கும் லைம் ஜிஞ்சர் மிக்சட் பானம் நமக்கு பித்தம் ஏற்பட்டால் அப்பப்பா, எத்தனை தொல்லை! வாந்தி குமட்டல், தலைச்சுற்றல், வயிற்றுக் கோளாறுகள் முதலியன பாடாய்ப்படுத்தும். பித்தத்தைக் குணப்படுத்தும் எளிய இயற்கை மருந்து எலுமிச்சம் பழமும், இஞ்சியும் ஆகும். இவற்றைப் பயன்படுத்தி ‘‘லைம் ஜிஞ்சர் மிக்சட் பானம்’ தயாரித்து பருகினால் பித்தம் குணமாகி நலன் பயக்கும். குக்கிராமம் முதல் பெரிய நகரம் வரை எங்கும் எப்போதும் கிடைக்கும் இயற்கை மருந்து எலுமிச்சம் பழமும், இஞ்சியும். மூன்று தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, இரண்டு தேக்கரண்டி இஞ்சிச்சாறு இரண்டையும் மூன்று தம்ளர் நீரில் கலந்து, போதிய அளவு வெல்லத்தைப் பொடித்திட்டு நன்கு கலக்கவும். இது, ‘லைம் ஜிஞ்சர் மிக்சர் பானம்’. பித்தத்தால் அவதிப்படு பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் இதில் இரண்டு தம்ளர் குடிக்கவும். இரண்டு, அல்லது மூன்று நாட்கள் தினம் ஃபிரஷாக இவ்வாறு தயாரித்து குடித்துவர, பித்தம் குணமாகும். இந்த லைம் ஜிஞ்சர் பானம் தயாரிப்பது எளிது. செலவோ குறைவு. பக்க விளைவில்லாத இயற்கை மருந்து இது. கிராமங்களில் பித்தத்தைப் போக்க கண்கண்ட மருந்தாக நெடு ங்காலமாகப் பயன்படுத்தி உடல் நலம் காத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் பயன்படுத்தி நலம் பெறுவோம்.
Post a Comment