எள்ளு சாதம்--சமையல் குறிப்புகள்
எள்ளு சாதம் 1. வெள்ளை எள் - 1/4 கப் 2. துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி 3. மிளகாய் வற்றல் - 4 4. புளி - சிறிது [1/2 மேஜைக்கரண்டி அளவு] 5. ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_1999.html
- 1. வெள்ளை எள் - 1/4 கப்
- 2. துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
- 3. மிளகாய் வற்றல் - 4
- 4. புளி - சிறிது [1/2 மேஜைக்கரண்டி அளவு]
- 5. அரிசி - 1 கப்
- 6. வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - 2 மேஜைக்கரண்டி
- 7. உப்பு
- 8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- தாளிக்க:
- 1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- 2. கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
- 3. கறிவேப்பிலை
- 4. பெருங்காயம்
- 5. மிளகாய் வற்றல் - 1
எள்ளு சாதம்
- அரிசியை கழுவி சாதம் வடிக்கவும். இதில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.
- வெள்ளை எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும்.
- 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவும்.
- மிக்ஸியில் எள், மிளகாய், தேங்காய் துருவல், புளி அனைத்தையும் தேவையான அளவு நீர் விட்டு விழுதாக் அரைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் சாதத்தில் சேர்த்து வேர்கடலையும் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும்.
2 comments
அனைத்து அயிட்டமும், அட்டகாசமாக செறீங்க, எனக்கு சென்னையின் ஸ்பெசல் வடகறி செய்வதைப்பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா
அன்புள்ள நண்பர் ஸ்பார்க் கார்த்தி அவர்களுக்கு தாங்கள் கேட்டிருந்த சென்னை வடகறி சமையல்குறிப்பு இன்று பெட்டகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாரித்து சுவைத்து அதன் விபரம் தெரிவிக்கவும். அன்புடன் நண்பர் A.S.முஹம்மது அலி
Post a Comment