ஓட்ஸ் ஹெல்தி லட்டு -- சமையல் குறிப்புகள்
ஓட்ஸ் ஹெல்தி லட்டு தேவையானவை: ஓட்ஸ் - ஒன்றரை கப், கோதுமை ரவை - அரை கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - அர...
தேவையானவை: ஓட்ஸ் - ஒன்றரை கப், கோதுமை ரவை - அரை கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - அரை கப், முந்திரி, திராட்சை - தலா 10.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி... முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் ஓட்ஸையும் கோதுமை ரவையையும் ஒன்றன் பின் ஒன்றாக (தனித்தனியே) வறுத்தெடுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு மாவாகப் பொடிக்கவும். இதனுடன், பொடித்த சர்க்கரை, பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து, மீதி நெய்யை உருக்கி விட்டு, லட்டுகளாகப் பிடிக்கவும். இந்த லட்டு, சுவையாக இருப்பதுடன், நார்ச்சத்தும் புரோட்டீனும் நிறைந்தது.
ஓட்ஸ் ஹெல்தி லட்டு: பாதாம், பிஸ்தா போன்ற ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக் கொண்டால் மிகவும் சத்தான லட்டாக அமையும்.
Post a Comment