ஆயுர்வேத எண்ணெய்க் குளியல்! ஹெல்த் ஸ்பெஷல்
ஆயுர்வேத எண்ணெய்க் குளியல்! ஆயுர்வேத எண்ணெய்க் குளியல்! ந.எண்ணெய் - 250 கிராம், கற்பூரவல்லி இலை, துளசி - தலா ஒர...
ந.எண்ணெய் - 250 கிராம், கற்பூரவல்லி இலை, துளசி - தலா ஒரு கை, வெற்றிலை- 6, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய வைத்து இறக்கி கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை, மிளகு, சீரகம் இவைகளைப் போட்டு, ஒரு தட்டைப் போட்டு மூடவும். லு மணி நேரம் சென்ற பின் அந்த எண்ணெயை வடிகட்டி தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளிக்கவும். ஆயுர்வேத கூந்தல்பொடி! சிகைக்காய் - 500 கிராம், கிச்சிலிக் கிழங்கு - 500 கிராம், க.பருப்பு - 50 கிராம், வெந்தயம் - 100 கிராம், பச்சரிசி - 100 கிராம், வேப்பிலை - 100 கிராம், வெட்டிவேர் - 50, புங்கங்காய் - 100 கிராம், அனைத்தையும் பொடி செய்து தண்ணீரில் குழைத்து, தலையில் எண்ணெய் ஊறியபின் தேய்த்துக் குளிக்கவும். ‘ஹெர்பல் கண்டிஷ்னர் பேக்’ கரிசலாங்கண்ணி-100 கிராம், மருதாணி - 100 கிராம், லெமன் - ஒன்று, முட்டை-2, வெந்தயம்- 2 டீஸ்பூன், டீ டிகாஷன் - 2 டேபிள் ஸ்பூன், வால் மிளகு - ஒரு டீஸ்பூன், வினிகர் - 2 டீஸ்பூன், புளிப்புத் தயிர் - 2 கப், விளக்கெண்ணெய் - 50 மிலி, வேப்ப எண்ணெய் - 50 மிலி, ந.எண்ணெய் - ஒரு டீஸ்பூன். கரிசலாங்கண்ணி, மருதாணி, லெமன், வெந்தயம், வால்மிளகு, இவைகளை மைய அரைக்கவும். இத்துடன் முட்டை, வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், வினிகர், புளிப்புத் தயிர் இவைகளைக் கலந்து பேஸ்ட்டாக்கவும். ந.எண்ணெயை சூடு செய்து தலையில் லேசாகத் தடவி, பின் இந்த பேக்கை போட்டு 2 மணி நேரம் கழித்து வாஷ் செய்யவும். முடி பட்டுப் போல சில்க்கியாக இருக்கும். டல் முகம் டக் என ஃப்ரஷ் ஆக... என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், முடித்தவுடன் நாட்டுத் தக்காளி ஜூஸ் -2 டீஸ்பூன், புளித்த தயிர் - 2 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வாஷ் செய்யுங்கள். இது ஒரு நல்ல பிளீச்சிங் ஏஜெண்ட். உடனே முகம் ஃப்ரஷ் ஆகும். வெள்ளரிக்காய் பேஸ்ட்டில் பன்னீர் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். ஒரு நாளைக்கு 7 அல்லது 8 முறை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வாஷ் செய்யலாம். கலையாத மேக்கப் ஆரஞ்சு ஜூஸை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் கழித்து வாஷ் செய்யுங்கள். பின் கிstக்ஷீவீழீமீஸீt தடவி ஃபவுண்டேஷன் போட்டு பின் மேக்கப் போட்டால் 6 மணி நேரம் கூட மேக்கப் கலையாமல் இருக்கும். உடம்புக்கு கேர் எடுக்க.... ஓமம், தலா 25 கிராம் சுக்கு, மிளகு, சீரகம், கொத்துமல்லி விதை, திப்பிலி, 5 கிராம் கண்டங்கத்திரி இலை தலா 5 கிராம் ஜாதிக்காய்ப் பொடி, ஏலரிசி இவைகளை வறுத் துப் பொடித்துக் கொள்ளுங்கள். பின் வெல்லத்தைப் பாகு காய்ச்சி இவைகளைக் கலந்து கிளறவும். ஆறியவுடன் கடைசியாக நெய் சேர்த்து இறக்கவும். இந்த லேகியத்தை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். தீபாவளிப் பலகாரம் சாப்பிட்ட வயிறு உடனே ஜீரணிக்கும். ஸ்வீட் சாப்பிட்டபின் உடனே காரம் சாப்பிடக் கூடாது. அரை மணி நேரம் கழித்து பின் காரம் சாப்பிடலாம். அன்று முழுக்க தயிர் சேர்க்காமல், மோர் சாப்பிடவும். அன்றைய உணவில் ஏதாவதொன்றில் மிளகு, இஞ்சி கண்டிப்பாக சேர்க்கவும்.
Post a Comment