வெந்தயக் கீரை கோப்தா கறி -- சமையல் குறிப்புகள்
வெந்தயக் கீரை கோப்தா கறி தேவையான பொருட்கள் கோப்தா செய்வதற்கு வெந்தயக் கீரை – 2 – 3 கட்டு கட்டித் தயிர் – 3/4 கப் மஞ்சள்தூள் – 1/4 த...

வெந்தயக் கீரை கோப்தா கறி
தேவையான பொருட்கள்கோப்தா செய்வதற்கு
- வெந்தயக் கீரை – 2 – 3 கட்டு
- கட்டித் தயிர் – 3/4 கப்
- மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
- கடலை மாவு – 1 கப்
- ஓமம் – 1/4 தேக்கரண்டி
- கடைந்த பாலேடு – 2 மேசைக்கரண்டி (அலங்கரிக்க)
- எண்ணெய் – பொரிப்பதற்கு
- உப்பு – தேவைக்கேற்ப
அரைத்துக் கொள்ளவும்
- வெங்காயம் – 2
- தக்காளி – 3
- இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு
- பச்சை மிளகாய் – 2
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
- தனியாப் பொடி – 1 மேசைக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 3/4 தேக்கரண்டி
- கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
- மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடலை மாவு, உப்பு இவற்றை தயிருடன் கலந்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு அதில் ஓமம், வெந்தயக்கீரை இவற்றைப் போட்டு வதக்கவும்.
- சிறிது வதங்கிய பிறகு கரைத்த மாவை அதனுடன் சேர்க்கவும். கிரேவி கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வைக்கவும். பின்பு இறக்கவும்.
- சூடு ஆறிய பின் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து சிறிய உருண்டைகளாக்கவும்.
- சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- கறி செய்யும் முறை
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
- கோப்தாவை தட்டில் வைத்து அதன் மேல் குழம்பை ஊற்றவும். துருவிய சீஸ், கொத்தமல்லித்தழை, கடைந்த பாலேடு, ஆகியவற்றை மேலே அலங்கரித்து சூடாக பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
Post a Comment