பீட்ரூட் சட்னி--சமையல் குறிப்புகள்
பீட்ரூட் சட்னி தேவை: பீட்ரூட் துருவல் - 1 கப், கெட்டி தக்காளிச் சாறு - 1 மேஜைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி, இடித்த மிளகாய்...
பீட்ரூட் சட்னி
தேவை:
பீட்ரூட் துருவல் - 1 கப், கெட்டி தக்காளிச் சாறு - 1 மேஜைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி, இடித்த மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - ருசிக்கேற்ப, கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிதம் செய்ய.
செய்முறை :
சிறிது எண்ணை விட்டு பீட்ரூட் மற்றும் பருப்பை தனித்தனியாக வதக்கவும். பீட்ரூட், உளுத்தம் பருப்பு, மிளகாய்த் தூள், தக்காளிச் சாறு ஆகியவைகளை மிக்சியில் இட்டு விழுதாக அரைக்கவும். தாளிதம் செய்யவும்.
என்ன பயன்?
இரத்த விருத்தி செய்யும் கிழங்கு இது. நரம்புகளை வலுப்படுத்தி, உற்சாகமாக செயல்பட வழி வகுக்கும். இந்த சட்னியுடன் சிறிது சுக்குப் பொடி சேர்த்து சாப்பிட வாய்வுத் தொல்லை அகலும். ஜெனரல் டானிக் என்று இதைச் சொல்லலாமா? டயாபட்டீஸ்காரர்களுக்கு இது வேண்டாமே.
‘கோடையில் ஊட்டி குளிரா?’ என்று வியந்துப் போக வைக்கும், இந்த வெள்ளரியை சுவைத்தால். அந்த வெள்ளரியில் சட்னி செய்தால்?
Post a Comment