வாழைப்பழ போண்டா--சமையல் குறிப்புகள்
* வாழைப்பழ போண்டா தேவையானவை: வாழைப்பழம் : இரண்டு மைதா - 150 கிராம் மண்டை வெல்லம் - 150 கிராம் ஏலக்காய் - ஐந்து கிராம் எள் - ஐந்து கிராம்...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_9862.html
* வாழைப்பழ போண்டா
தேவையானவை:

வாழைப்பழம் : இரண்டு மைதா - 150 கிராம் மண்டை வெல்லம் - 150 கிராம் ஏலக்காய் - ஐந்து கிராம் எள் - ஐந்து கிராம் எண்ணெய் - 250 கிராம்
செய்முறை: சிறிதளவு தண்ணீர் விட்டு, வெல்லத்தை பாகாய் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். வாழைப்பழத்தை மைதா மாவுடன் பிசைந்து, பாகு, ஏலப்பொடி, எள் சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின், சிறு உருண்டைகளாக்கி, பொறித்தெடுக்க வேண்டும். ஊறிய பழத்தின் சுவையில், போண்டா சுவை தூக்கலாக இருக்கும்.
Post a Comment