வாழைக்காய் தோல் துவையல்--சமையல் குறிப்புகள்
வாழைக்காய் தோல் துவையல் தேவையான பொருட்கள் : · வாழைக்காய் தோல் - 1 கப் ( 1 காயில் இருந்து தோல் நீக்கியது) · காய்ந்த மிளகாய் ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_5716.html
வாழைக்காய் தோல் துவையல்
தேவையான பொருட்கள் :
· வாழைக்காய் தோல் - 1 கப் ( 1 காயில் இருந்து தோல் நீக்கியது)
· காய்ந்த மிளகாய் - 4
· கடலை பருப்பு - 2 மேஜை கரண்டி
· உளுத்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி
· கடுகு, எண்ணெய் - 1 தே.கரண்டி
· தேங்காய் - சிறிதளவு
· பெருங்காயம் - சிறிதளவு
· உப்பு - தேவைக்கு
செய்முறை :
· கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலைப்பருப்பு + காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
· பின்னர் பொடியாக நறுக்கிய வாழைக்காய் தோலினை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
· வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு அத்துடன் தேங்காய் + பெருங்காயம் + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
· சுவையான சத்தான வாழைக்காய் தோல் துவையல் ரெடி.
குறிப்பு :
வாழைக்காய் தோலினை நன்றாக வதக்கி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவை செய்யும் பொழுது சேர்த்து அரைத்தால் இட்லி , தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன்.
வாழைப்பழம் தோலினை, வாழைப்பழம் குழிப்பணியாரம், தோசை போன்றவை செய்யும் பொழுது தோலையும் சிறிது அரைத்தோ அல்லது மிகவும் பொடியாக நறுக்கி போட்டு செய்தாலோ சூப்பராக இருக்கும்…
Post a Comment