ஓட்ஸ் கஞ்சி--சமையல் குறிப்புகள்
ஓட்ஸ் கஞ்சி தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 4 டேபிள் ஸ்பூன் பால் - 2 கப் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள் - சிறிதளவு முந்திரி, வால்நட், ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_7757.html
ஓட்ஸ் கஞ்சி
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரி, வால்நட், பாதாம்,
திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* 2 கப் பாலை ஒன்றரை கப்பாகச் சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும்.
* கொதிக்கும் பாலில், ஓட்ஸ், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
* இப்போது முந்திரி, வால்நட், பாதாம், திராட்சை அனைத்தையும் பொடியாக அரிந்து அதனை கொதிக்கும் பாலில் ஏலக்காய்த்தூளுடன் சேர்க்கவும்.
* ஓரிரு நிமிடங்களில் இறக்கினால் ஒப்பில்லாத சத்துடைய ஓட்ஸ் கஞ்சி ரெடி.
* சூடாக டம்ளரில் ஊற்றி கொடுக்கலாம். நீங்களும் சுவைக்கலாம்.
சுவைக்கான குறிப்பு
மேலும் அதிக சுவை விரும்புவோர் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்க விடலாம்.
-----------------------------------------------------------------------------------
Post a Comment