வெஜ் பால்ஸ்--சமையல் குறிப்புகள்
வெஜ் பால்ஸ் தேவை வேக வைத்த முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப், பாதி வேக வைத்த நறுக்கிய, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய் - 1 கப்,...
வெஜ் பால்ஸ்
தேவை
வேக வைத்த முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப், பாதி வேக வைத்த நறுக்கிய, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய் - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி, இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயத் தாள் - 1 மேஜைக்கரண்டி, நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி, பொடித்த பட்டை, கிராம்பு - 1 தேக்கரண்டி, உப்பு - ருசிக்கேற்ப, கடலை மாவு - 1 கப், சமையல் எண்ணெய் - பொரித்து எடுக்க.
செய்முறை :
முளைகட்டிய பயறை கரகரப்பாக அரைக்கவும். நறுக்கிய காய்கறி, வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது, வெங்காயத் தாள், பச்சை மிளகாய், பட்டை கிராம்பு பொடி, உப்பு ஆகியவைகளை ஒன்றாகக் கலக்கி வடை பதத்துக்கு தயாரிக்கவும். சிறுசிறு உருண்டைகளாக்கவும். கடலை மாவில் திட்டமாக உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். எண்ணெய்யை சூடாக்கவும்.உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் இட்டுப் பொரித்து எடுக்கவும்.
என்ன பயன்?
நீரிழிவுக்காரர்களுக்கு வயிறு நிறைந்தது போல உணர்வு கொடுக்கும், சத்து நிறைந்த, நார்ச்சத்து நிறைந்த பண்டம். இளையோருக்கும் சுவையான நொறுக்குத் தீனி.
டயட்டில் இருக்க நினைப்போர் மாவில் தோய்க்காமல், அப்படியே உருண்டைகளை இட்லி பாத்திரத்தின் ஆவியில் வேக வைத்தும் சாப்பிடலாம். வெங்காயத்தாள் மிகவும் பயனுள்ளது. பல பேரும் அதை அவ்வளவாக விரும்புவதில்லை.
வைட்டமின் சி சத்து உள்ளது. இதுவும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. கேன்சர்... அதுவும் குறிப்பாக குடல் கேன்சர் வராமல் தடுக்கும் தன்மை உடையது. அது மட்டும் இல்லை, தோல் சுருங்கி முதுமைத்தன்மை எட்டிப் பார்ப்பதை தள்ளிப்போடும் ஆற்றலும் உண்டு.
ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் இந்த வெங்காயத்தாளை தினமும் பயன்படுத்தி நோயற்ற வாழ்வுக்கு ‘வெல்கம்’ சொல்லுவோமே.
Post a Comment