வெள்ளை அப்பம் -- சமையல் குறிப்புகள்
வெள்ளை அப்பம் தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – 1 /2 கப் தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்) சமையல் சோடா – சிறி...
- பச்சரிசி – 2 கப்
- உளுத்தம்பருப்பு – 1 /2 கப்
- தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்)
- சமையல் சோடா – சிறிது
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.
- மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
- ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும்.
- அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும்.
- இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும்.
- எல்லா மாவையும் இதே போல் சிறிய அப்பங்களாக ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும்.
- அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Post a Comment