கருணை கிழங்கு முறுக்கு--சமையல் குறிப்புகள்
கருணை கிழங்கு முறுக்கு தேவையான பொருட்கள் கருணைக்கிழங்கு - 100 கிராம் அரிசி மாவு - 150 கிராம் உளுந்து மாவு - 40 கிராம் பெருங்காயம் - 1த...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_40.html

தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு - 100 கிராம் அரிசி மாவு - 150 கிராம் உளுந்து மாவு - 40 கிராம் பெருங்காயம் - 1தேக்கரண்டி வெள்ளை எள் - 2 தேக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவையான அளவுசெய்முறை:
கருணைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். எள்ளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயம், எள், கருணைக்கிழங்கு மசியல், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து, அந்த எண்ணெயிலிருந்து, இரண்டு தேக்கரண்டி எடுத்து, மாவில் கலந்து கொள்ளவும். இப்போது, முறுக்கு குழாயில் மாவை அடைத்து, எண்ணெயில் பிழியவும். தீயைக் குறைத்து, முறுக்கு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். கருணைக்கிழங்கு முறுக்கு ரெடி.
Post a Comment