கமலா பாயசம்--சமையல் குறிப்புகள்
கமலா பாயசம் தேவையான பொருட்கள் : கமலாப் பழ உரித்த சுளைகள் - 1 கப், பெரிய ஜவ்வரிசி - 1 கப், சுண்டக் காய்ச்சிய பால் - 1 கப், வெல்லக் கரைசல்...

கமலா பாயசம்
தேவையான பொருட்கள் :
கமலாப் பழ உரித்த சுளைகள் - 1 கப், பெரிய ஜவ்வரிசி - 1 கப், சுண்டக் காய்ச்சிய பால் - 1 கப், வெல்லக் கரைசல் - 1 கப், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதம் பருப்பு - ஒவ்வொன்றும் 10 எண்ணிக்கை, நெய் - 1 மேஜைக்கரண்டி.
செய்முறை :
வாணலியில் நெய்யை உருக்கி ஜவ்வரிசியை வறுக்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து அதிலேயே வேகவிடவும்.
முத்து முத்தாக கண்ணாடி போல வெந்த பிறகு அதில் காய்ச்சிய பால் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லக் கரைசல் சேர்த்து ஒரு சேர வெந்த பிறகு அதில் கமலாப் பழ உரித்த சுளைகளை உதிர்த்துப் போடவும்.
உடனடியாக இறக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் சீவிய பாதம் பருப்பு ஆகியவைகளால் அலங்கரிக்கவும்.
சுவை?
ம்.... அப்படியே அள்ளிக்கொண்டு போகும் சுவை!
என்ன பயன்?
வளரும் குழந்தைகளுக்கு பல் மற்றும் எலும்பு நன்கு வளர கால்சியம் தேவை. வயதானோருக்கும் இயற்கை வழியிலேயே இந்த கால்சியம்
ஆரஞ்சுப் பழத்தில் உள்ளது.
ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த ஆரஞ்சை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். போலிக் ஆசிட் உள்ளதால் மூளைக்கும் நல்ல டானிக். ஆகவே அனைத்து வயதினருக்கும் ஏற்ற இயற்கை டானிக் ஆரஞ்சு. அவசியம் பயன்படுத்துங்க!
வெய்யிலினால் சோர்வு என்றால், அது மிகவும் ஆட்டிப்படைப்பது ரத்த சோகைக்காரர்களைத்தான். நல்ல நாளிலேயே மிகவும் களைப்படைந்து, எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கின்றவர்கள் இவர்கள் ஆச்சே... அதுவும் சிறு வயதினரும், பெண்களும் பலவீனமாக காட்சி அளிப்பார்கள். அவர்களுக்காக ஒரு எளிய, விரைவாக செய்யக்கூடிய சட்னி.
Post a Comment