ஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் பார்லி-ஒட்ஸ் மிகவும் சுவையான மாலை நேர இனிப்பு பணியாரம். சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சமைக்க தேவைப்...

ஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம்
பார்லி-ஒட்ஸ்
மிகவும் சுவையான மாலை நேர இனிப்பு பணியாரம். சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· ஒட்ஸ் - 1 கப்
· நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1
· சக்கரை - 2 மேஜை கரண்டி
· ஏலக்காய் - 2
· தேங்காய துறுவல் - 1 மேஜை கரண்டி
· உப்பு - ஒரு சிட்டிகை
· நெய் - சிறிதளவு
செய்முறை :
ஒட்ஸ் + 1/4 கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஊறவைத்த ஒட்ஸினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஏலக்காய் + சக்கரையினை சேர்த்து பொடித்து வைக்கவும். வாழைப்பழத்தினை மசிக்கவும்.
அரைத்த ஒட்ஸ் + பொடித்த சக்கரை + மசித்த வாழைப்பழம் + தேங்காய் துறுவல் + உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பணியாரகல், சூடனாதும் கரைத்த மாவினை ஊற்றி அதன் மீது நெய் ஊற்றி வேகவிடவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு, திருப்பி போட்டு வேகவிடவும்.
சுவையான சத்தான ஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் ரெடி.
Post a Comment