பக்கோடா குழம்பு--சமையல் குறிப்புகள்
பக்கோடா குழம்பு தேவையானவை கடலைப்பருப்பு - 2 கப் பொட்டுக்கடலை - 1/2 கப் பெரிய வெங்காயம் - 4 பூண்டு - 10 பல் பச்சை மிளகாய் - 10 தக்காளி - 3 ...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_1746.html
பக்கோடா குழம்பு
தேவையானவை
கடலைப்பருப்பு - 2 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 4
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 10
தக்காளி - 3
தேங்காய் - 1
எலுமிச்சம் பழம் - 1
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பட்டை கிராம்பு, சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 4 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி இவற்றைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
* தேங்காயைத் துருவி நைசாக அரைக்கவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்புத்தூள் போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு சிவக்க வதக்கவும்.
* தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.
* பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்த தேங்காயை விட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியான பதம் வந்ததும் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கி வைக்கவும்.
* கடலைப் பருப்பை ஊற வைத்து பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வெந்ததும் எடுத்து குழம்பில் போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.
* சூடான சாதத்துடன் பரிமாற, பக்கோடா குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
************************************************************
Post a Comment