பீட்ரூட்--சமையல் குறிப்புகள்-2

பீட்ரூட் ஜாமுன் அல்வா தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 1 (துருவியது) குலாப் ஜாமுன் மிக்ஸ் - 4 தே. கரண்டி காய்ச்சின பால் - 1 கப் சர்க்கரை - 2/...

பீட்ரூட் ஜாமுன் அல்வா தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 1 (துருவியது) குலாப் ஜாமுன் மிக்ஸ் - 4 தே. கரண்டி காய்ச்சின பால் - 1 கப் சர்க்கரை - 2/3 கப் (அல்லது தேவையான அளவு) நெய் - 4 தே. கரண்டி ஏலக்காய் தூள் - சிறிதளவு முந்திரி துண்டுகள் - நெய்யில் வறுத்தது சிறிதளவு தண்ணீர் - 1/2 கப் செய்முறை : ஒரு கனமான பாத்திரத்தில் 2 தே. கரண்டி நெய் விடவும். நெய் உருகியதும் அதில் பீட்ருட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவிடவும். தண்ணீர் சுண்டியதும் காய்ச்சின பால் விட்டு கிளறி வேக விடவும். நன்றாக கொதித்து வரும்போது குலாப் ஜாமுன் மிக்ஸ் தூவி நன்றாக கிளறவும். பால் சுண்டியதும் சர்க்கரை, 1 தே. கரண்டி நெய் விட்டு கிளறி விடவும். அல்வா சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய், முந்திரி, ஏலக்காய் தூவி கிளறவும். நெய் தடவிய கிண்ணத்தில் சேமிக்கவும். ------------------------------------------------------------------------------ பீட்ரூட் பொரியல் தேவையானவை 1. பீட்ரூட் - 2 2. உப்பு- தேவையான அளவு 3. எண்ணெய்- 1 டீஸ்பூன் 4. கடுகு- 1 டீஸ்பூன் 5. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன் 6. மிளகாய்வற்றல்- 3 7.காயம்- சிறிதளவு 8. தேங்காய்த்துருவல்- 3 டீஸ்பூன் செய்முறை 1. பீட்ரூட்டை அலம்பிக் கொண்டு தோலை அகற்றவும். 2. அரிப்பில் துருவிக் கொள்ளவும். 3. தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிசம் செய்து பீட்ரூட்டைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 4. துருவி இருப்பதால் பீட்ரூட் சீக்கிரம் வெந்துவிடும். 5. வெந்த பீட்ரூட்டுடன் 3 டீஸ்பூன் தேங்காய்ப்பூவைச் சேர்த்து அலங்கரிக்கவும். கூடுதல் டிப்ஸ் 1. பீட்ரூட்டைத் துருவச் சிரமமாக இருக்கும் தோலை அகற்றிய பிறகு மைக்ரோவேவ்வில் ஒரு நிமிடத்திற்கு வைத்து எடுத்தால் துருவுவதற்குச் சுலபமாக இருக்கும். 2. இதே முறையில் கேரட், கோஸ் பொரியலையும் செய்யலாம். கோஸ் சிறிதாக ஆகி விடும் போது பீட்ரூட்,கோஸ் துருவி மேற்கூறிய முறையில் பொரியல் செய்யலாம். பீட்ரூட்டுடன் கேரட்டையும் துருவி இம்முறையில் செய்யலாம். 3. இனிப்புச்சுவை இருப்பதால் மிளகாய்வற்றலை அதிகமாகப் போடுவது பொரியலிற்குக் காரச்சுவையைத் தரும். மிளகாய் வற்றல் நிறமும் பீட்ரூட் நிறமும் ஒரே மாதிரி இருப்பதால் உண்ணும் போது மிளகாய்வற்றலை அகற்றி விட்டு உண்ண வசதியாக நீளமாகவே மிளகாய்வற்றலைத் தாளிசம் செய்யலாம். 4. மலச்சிக்கலை நீக்கும், ரத்தசோகையைப் போக்கும் சக்தி பீட்ரூட்டிற்கு உண்டு. 5. பீட்ரூட் நமது உடலில் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. கொழுப்புச்சத்து கிடையாது. 6.கர்ப்பமான பெண்களுக்குத் தேவையான அதிக சத்துக்கள் பீட்ரூட்டில் இருக்கின்றது. 7.புற்று நோய், பெண்களைத் தாக்கும் மார்புபுற்று நோயை வராமல் காக்கும் வல்லமை பீட்ரூட்டிற்கு இருப்பதால் அனைவரும் ஒதுக்காமல் அடிக்கடி பீட்ரூட்டை உணவில் சேர்த்து வர வேண்டும். -------------------------------------------------------------------------------- பீட்ரூட் சட்னி எளிதான முறையில் பீட்ரூட் சட்னி (பீட்ரூட் துவையல்) செய்யும் முறை. தேவையான பொருட்கள் பீட்ரூட் - 1 வரமிளகாய் - 4 உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி கடலைபருப்பு - 2 தேக்கரண்டி புளி - சிறிய நெல்லிக்காய் அளவு தேங்காய் - 2 தேக்கரண்டி(விருப்பதிற்கேற்ப) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை பீட்ரூட் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய், பீட்ரூட், புளி ஆகியவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். குறிப்பு இந்த சட்னி சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ---------------------------------------------------------------------------- பீட்ரூட் அல்வா தேவையானப்பொருட்கள்: பீட்ரூட் - 1 பால் - 1 கப் சர்க்கரை - 1/2 கப் நெய் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்) முந்திரிப்பருப்பு - 10 செய்முறை: பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும். கை விடாமல் அல்வா கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய், ஜாதிக்காய் தூள்களையும், வறுத்த முந்திரியையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும். --------------------------------------------------------------------------------------- தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும். பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும். பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

Related

சமையல் குறிப்புகள் 2166825634047462076

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item