மைசூர் பாகு:--சமையல் குறிப்புகள்
மைசூர் பாகு: கடலை மாவு, 900 கிராம், 100 கிராம் மைதா மாவு, இரண்டு கிலோ சர்க்கரை, 2 கிலோ நெய் பயன்படுத்தலாம். சர்க்கரை கொதித்ததும், கம்பி ப...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_3861.html
மைசூர் பாகு: கடலை மாவு, 900 கிராம், 100 கிராம் மைதா மாவு, இரண்டு கிலோ சர்க்கரை, 2 கிலோ நெய் பயன்படுத்தலாம். சர்க்கரை கொதித்ததும், கம்பி பக்குவத்திற்கு முன்பாக, கடலை மாவையும், மைதாவையும் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாக தூவி கிளற வேண்டும். பக்கத்து அடுப்பில் நெய்யை வைத்து, கொஞ்சம், கொஞ்சமாக விட்டு கிளற வேணடும். எல்லாமுமாக கலந்து, பொங்கி வரும் போது, நெய் தடவிய டிரேயில் கொட்டி, வில்லைகள் போடவும். சர்க்கரை பாகு பதம், கம்பிப் பதத்திற்கும் அதிகமாகிப் போனால், மைசூர்பாகு உதிராக வரும். கடலை மாவு மட்டும் சேர்த்து, மைசூர் பாகு செய்யும் போது, பக்குவம் கொஞ்சம் தவறினால், கறுத்துப் போகும். வெறும் நெய்யால், மைசூர் பாகு செய்யும் போது கலர் அவ்வளவு எடுப்பாக கிடைக்காது. நெய் மற்றும் டால்டாவை சம அளவில் கலந்து செய்தால், மைசூர்பாகு கலர் நன்கு கிடைக்கும்.
Post a Comment