மட்டன் வெஜ் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டிறைச்சி - 350 கிராம் வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 4 காரட் - 100 கிராம் ...

மட்டன் வெஜ் குழம்பு
தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி - 350 கிராம்
வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 4
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கியது)
புதினா கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் அல்லது டால்டா - 1 டீஸ்பூன்
செய்முறை
* மட்டனைப் பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், கறிவேப்பிலை, இஞ்சி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும்.
* நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக வைக்கவும். தொடர்ந்து வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.
* மைதாவை நீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும், போதுமான உப்பு சேர்க்கவும்.
* மட்டன், காய்கறி நன்கு வெந்து கெட்டியானதும் மல்லி, புதினா இலைகளைத் தூவி இறக்கவும்.
* இப்போது மட்டன் வெஜ் ஸ்டியூ ரெடி.
குறிப்பு
* ஸ்டியூ ரொட்டியுடன் சுவைக்க ஏற்றது.
* மைதாவிற்கு பதிலாக தேங்காய்ப்பால் ஊற்றியும் ஸ்டியூ செய்யலாம்.
******************************************************************
Post a Comment