சரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி--சமையல் குறிப்புகள்
சரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி - அவன் செய்முறை - Saravana Bhavan Hotel Kaima Idly - Using Oven இந்த கைமா இட்லி மிகவும் அருமையாக இருக்கும்..மீத...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_3978.html
சரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி - அவன் செய்முறை - Saravana Bhavan Hotel Kaima Idly - Using Oven
இந்த கைமா இட்லி மிகவும் அருமையாக இருக்கும்..மீதம் இருக்கும் இட்லியில் எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்'.குழந்தைக்கு மிகவும் பிடிக்கும்'
இதற்கு இட்லியினை எண்ணெயில் தான் பொரித்து எடுத்து செய்வாங்க. நான் எப்பொழுதுமே இதனை அவனில் வைத்து சமைப்பேன். எண்ணெயினை அதிகம் பயன்படுத்தாமல் செய்வதால் உடலிற்கு மிகவும் நல்லது.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்….
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
இட்லி - 6
· தக்காளி சாஸ் ( Tomato Sauce) - 3 மேஜை கரண்டி
· லெமன் ஜுஸ் - 1 மேஜை கரண்டி
· கடுகு - தாளிக்க
· எண்ணெய் - சிறிதளவு
பொடியாக நறுக்கி கொள்ள :
· வெங்காயம் - 1
· பூண்டு - 6 பல்
· கருவேப்பில்லை - 5 இலை
· பச்சைமிளகாய் - 1
· வெங்காயதாள் - 1
· கொத்தமல்லி - சிறிதளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
· மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
· கரம்மசாலா தூள் - 1/4 தே.கரண்டி
· உப்பு - தேவையான அளவு
செய்முறை :
· பொடியாக நறுக்க கொடுத்துள்ள பொருட்களை நறுக்கி தனியாக வைக்கவும்.
· இட்லியினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.
· முற்சூடு செய்யப்பட்ட அவனில் 400 Fயில் Broil Modeயில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
· இப்பொழுது இட்லி நன்றாக ப்ரை ஆகியது மாதிரி இருக்கும்.
· கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்த பூண்டினை போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
· இத்துடன் தக்காளி சாஸ் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக 5 - 6 நிமிடங்கள் வதக்கவும்.
· எல்லாம் நன்றாக வதங்கியவுடன், இட்லி துண்டுகளினை சேர்த்து கிளறவும்.
· கடைசியில் வெங்காயதாள் + எலுமிச்சை சாறு + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.
· சுவையான எளிதில் செய்ய கூடிய கைமா இட்லி ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
தக்காளி சாஸுற்கு பதிலாக 1 தக்காளியினை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். (கவனிக்க: தக்காளி சாஸும் Ketchupயும் ஒன்று கிடையாது'.)
தக்காளி சாஸ் சேர்ப்பதால் நல்ல கலர் வரும். இதற்கு பதில் தக்காளியினை சேர்த்தால் சிறிது கேசரி கலர் சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அவனில் செய்ய முடியவில்லை என்றால், நான் - ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இட்லியினை வறுத்து கொள்ளலாம்.
இட்லியினை கண்டிப்பாக எண்ணெயில் பொரிக்க கூடாது.இட்லி ஸ்பாஞ் மாதிரி எண்ணெயினை இழுத்து கொள்ளும்.
இதில் காரட், குடைமிளகாய் போன்ற காய்களையும் சேர்த்து கொள்ளலாம்.
Post a Comment