ஃப்ரூட் பஞ்ச் ரோல் ...சமையல் குறிப்புகள்
ஃப்ரூட் பஞ்ச் ரோல் தேவையானவை: சப்போட்டா - ஒன்று, வாழைப்பழம் - பாதி பழம் ஆப்பிள் - பாதி பழம், வறுத்த ரவை - அரை கப், பொடித்த சர்க்கரை - கால...

ஃப்ரூட் பஞ்ச் ரோல்
தேவையானவை: சப்போட்டா - ஒன்று, வாழைப்பழம் - பாதி பழம் ஆப்பிள் - பாதி பழம், வறுத்த ரவை - அரை கப், பொடித்த சர்க்கரை - கால் கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
அலங்கரிக்க: கொப்பரைத் துருவல், பொடித்த முந்திரி - தலா இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை: சப்போட்டா, வாழை, ஆப்பிள் பழங்களை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு, அரைத்த பழக் கலவையை அதில் போட்டு சுருளக் கிண்டவும். பிறகு வறுத்த ரவை சேர்த்துக் கிளறி, பொடித்த சர்க்கரை போட்டு மேலும் கிளறி இறக்கவும். இளம் சூடாக இருக்கும்போது 'ரோல்’களாக உருட்டி, பொடித்த முந்திரியில் சிறிது தடவி, கொப்பரையைத் தூவி வைத்தால்... சுவையான ஃப்ரூட் பஞ்ச் ரோல் தயார்.
ஃப்ரூட் பஞ்ச் ரோல்: தேவைப் பட்டால் இன்னும் சில வகை பழங்களையும் சேர்க்கலாம். வித்தியாசமான ருசி கிடைக்கும்.
Post a Comment