அலிகார் பிரியாணி தேவையான பொருட்கள் : Chicken Breast with Skin & Bone - 2 ( சுமார் 1 பவுண்ட்) சிக்கன் ஸ்டாக் செய்ய தேவையானவை ...

அலிகார் பிரியாணி
தேவையான பொருட்கள் :
Chicken Breast with Skin & Bone - 2 ( சுமார் 1 பவுண்ட்)
சிக்கன் ஸ்டாக் செய்ய தேவையானவை :
· பூண்டு - 6 பல்
· இஞ்சி - 1 துண்டு பெரியது
· சோம்பு - 1 மேஜை கரண்டி
· தனியா - 1 மேஜை கரண்டி
· மிளகு - 1 மேஜை கரண்டி
· ஏலக்காய் - 3 , கிராம்பு - 3
· பிரியாணி இலை - 1 (விரும்பினால்)
· பச்சைமிளகாய் - 5
· வெங்காயம் - 1 பெரியது நறுக்கியது
· உப்பு - 1 தே.கரண்டி
· தண்ணீர் - 4 கப்
· எண்ணெய் - 1 தே.கரண்டி
பிரியாணி செய்ய :
· பாஸ்மதி அரிசி - 2 + 1/2 கப்
· தயிர் - 1 கப்
· எண்ணெய் - 1 தே.கரண்டி
· மிளகு - 5
· ஏலக்காய் - 2
பிரியாணிக்கு அரைத்து கொள்ள :
· பூண்டு - 10
· இஞ்சி - 1 பெரிய துண்டு
· பட்டை - 2
· ஜாதிக்காய் - சிறிதளவு (விரும்பினால்)
செய்முறை:
· முதலில் சிக்கனை தோல், எலும்பு எல்லாம் நீக்கி தனியாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தோல் + எலும்பினை தனியாக கழுவி வைத்து கொள்ளவும்.
· அரிசியினை கழுவி தண்ணீரில் 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். தயிரினை மிக்ஸியில் போட்டு மோராக அடித்து கொள்ளவும்.
சிக்கன் ஸ்டாக் செய்ய :
· பிரஸர் குக்கரில், எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை + ஏலக்காய் + கிராம்பு போட்டு தாளித்து பின் வெங்காயம் +பச்சைமிளகாய் + இஞ்சி + பூண்டு + சிக்கன் தோல் , எலும்பு சேர்த்து கொள்ளவும்.
· இத்துடன் மீதம் உள்ள் பொருட்கள்(மிளகு, சோம்பு, தனியா ) + தண்ணீர் + உப்பு எல்லாம் சேர்த்து கொள்ளவும்.
· இதனை 6 - 7 விசில் வரும் வரை வேகவிடவும்.
· கடைசியில் ஸ்டாகினை(சிக்கன் தண்ணீர்) வடிகட்டி கொள்ளவும். இப்பொழுது சிக்கன் ஸ்டாக் ரெடி.
கவனிக்க:
சிக்கன் தோலுடன் இருந்தால், தோல் மற்றும் தேவை இல்லாத எலும்புகளை சேர்த்து 6 விசில் வரும் வரை வேகவிடவும்.
சிக்கனில் தோல் இல்லை என்றால், சிக்கனை ஸ்டாக் செய்ய சேர்க்காமல் வெரும் தண்ணீர் மட்டும் சேர்த்து 2 - 3 விசில் வரும் வரை வேகவிடவும். பின் குக்கரினை திறந்து அதில் 4 - 5 சிக்கன் துண்டுகளை போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும். இதில் சேர்த்த சிக்கனை சாலடாக சாப்பிடலாம்.
பிரியாணி செய்ய :
· இஞ்சி + பூண்டு + பட்டை + ஜாதிக்காய் + 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
· கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு + ஏலக்காய் தாளித்து அத்துடன் அரைத்த விழுதினை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியவுடன், சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
· சிக்கன் வதங்கியவுடன் தயிர் + சிறிது உப்பு சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் வேகவிடவும்.
· இத்துடன் அரிசியினை சேர்த்து வதக்கவும்.
· 1 கப் அரிசிக்கு 2 கப் சிக்கன் ஸ்டாக் என்று விதம் சேர்த்து கொண்டு பிரியாணியினை வேகவிடவும். (குறிப்பு :நான் எப்பொழுதுமே எல்லாம் தாளித்த பிறகு அதனை மைரேவேவில் வேகவைத்து கொள்வேன். அவரவர் விருப்பம் போல அதனை தம் போடாவே அல்லது பிரஸர் குக்கரிலே செய்து கொள்ளலாம்.)
· சுவையான எளிதில் செய்ய கூடிய அலிகார் பிரியாணி ரெடி.
குறிப்பு :
இந்த பிரியாணியில் எந்த கலரும் சேர்க்காததால் வெள்ளை கலரில் இருக்கும். விரும்பினால் நீங்க கலர் சேர்த்து கொள்ளலாம். ஆனால் வெள்ளை கலர் தான் இதன் ஸ்பெஷாலிட்டி.
ஜாதிக்காய் இல்லை என்றால் ஜாதிக்காய் பொடியினை சேர்த்து கொள்ளலாம்.
இந்த சிக்கன் ஸ்டாகினை செய்து fridgeயில் 1 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.
சிக்கன் ஸ்டாகினை போலவே வெஜுடேபுள் ஸ்டாகினை காய்கறிகள் சேர்த்து செய்து கொள்ளலாம்.
தயிரினை அப்படியே சேர்க்காமல் அதனை மிக்ஸியில் மோராக அடித்து கொள்வதால் நன்றாக இருக்கும்.
Post a Comment