கணவருக்கு நன்றியுடன் இருங்கள் ..அமுத மொழிகள்
கணவருக்கு நன்றியுடன் இருங்கள் அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் யஸீத் அல் அன்ஸாரிய்யா(ரலி)நான் என்...
அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் யஸீத் அல் அன்ஸாரிய்யா(ரலி)நான் என் வயதினையொத்த சில பெண்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பக்கமாக அண்ணலார்(ஸல்) அவர்கள் சென்றார்கள். எங்களை நோக்கி ஸலாம் உரைத்தார்கள். ""நல்லவிதமாக நடந்து கொள்ளும் கணவன்மார்களுக்கு நீங்கள் நன்றியில்லாமல் நடப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று கூறினார்கள். பிறகு, மேலும் கூறினார்கள்: ""பெண்களாகிய உங்களில் ஒருசிலர் தம் பெற்றோரிடம் (மணமாகாத) கன்னியாக உட்கார்ந்திருக்கின் றார்கள். பிறகு வல்ல அல்லாஹ் அவர்களுக்குக் கணவனை அளிக்கின்றான். பிறகு அவள் ஏதாவதொரு விஷயத்தில் கோபமடைந்து தன் கணவனைப் பார்த்து, "உன்னால் எனக்கு நிம்மதி ஏதும் கிட்டியதில்லை; நீ எனக்கு எந்த நன்மையும் செய்ததில்லை' என்று கூறுகின்றாள்.'' (அல் அதபுல் முஃப்ரத்) விளக்கம்: இந்த நபிமொழியில் நன்றியில்லாமல் நடந்து கொள்வதைத் தவிர்க்கும்படி பெண்களுக்குஅறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த நோய் பொதுவாக பெண்களிடையே காணப்படுகின்றது. ஆகவே, பெண்கள் இதனைவிட்டுத் தப்பிக்க மிகவும் முயற்சி செய்திட வேண்டும்.
1 comment
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Post a Comment