கிரீன் டோக்ளி ..சமையல் குறிப்புகள்
கிரீன் டோக்ளி தேவையானவை : கோதுமை மாவு, சோயா மாவு, பச்சைப்பயறு - தலா அரை கப், ஓமம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ...

கிரீன் டோக்ளி
தேவையானவை: கோதுமை மாவு, சோயா மாவு, பச்சைப்பயறு - தலா அரை கப், ஓமம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: கோதுமை மாவு, சோயா மாவுடன் ஓமம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துத் திரட்டி சப்பாத்தி போல் தேய்த்து, சிறு துண்டுகளாக நறுக்க... டோக்ளி ரெடி! இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு நறுக்கிய டோக்ளி துண்டுகள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்துவிடவும்.
பச்சைப்பயறை வேக வைக்கவும். கொத்தமல்லி, பச்சை மிளகாய், புதினா, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அதில் வெந்த பச்சைப் பயறு, டோக்ளி துண்டுகள், அரைத்த கொத்தமல்லி விழுது சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
கிரீன் டோக்ளி: பச்சைப்பயறை குழைய வேக வைத்து மசித்து சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.
Post a Comment