பாகற்காய் ஸ்டடு ரோஸ்ட்-சமையல் குறிப்புகள்
தேவையானவை நீள பாகற்காய் - 1/4 கிலோ கடலைமாவு - 1/2 கப் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 சிட்டிகை பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை ரீப...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_2064.html
தேவையானவை
நீள பாகற்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 1/2 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
ரீபைண்ட் எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* பாகற்காயை விரல் நீளத்திற்கு குறுக்காக மூன்று துண்டுகளாக நறுக்கவும், அவை ஒவ்வொன்றையும் நான்காக வகிர்ந்து கொள்ளவும். முழுவதுமாகக் கீறாமல் சிறிது நீளத்திற்கு மட்டும் கீற வேண்டும்.
* சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு சுளை புளி போட்டு அரை வேக்காடாக வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
* கடலைமாவை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி, ஒவ்வொரு பாகற்காய் துண்டுக்குள்ளும் நன்றாகத் திணித்து வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஸ்டடு பாகற்காய்களைப் போட்டு சில நிமிடங்கள் மூடி வைத்து வெந்ததும், திருப்பிவிட்டு முறுகவிட்டு எடுக்கவும். கறிவேப்பிலை இலைகளை பொரிய விட்டுத் தூவி சுவை சேர்க்கலாம்.
குறிப்பு:-
* நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
* முறுகலாக வறுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
Post a Comment