சில எளிய குறிப்புகள்--வீட்டுக்குறிப்புக்கள்
பட்டுப் புடவைகளைத் துவைக்கும் போது, அலசும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அலசினால் பட்டுப் புடவையின் நிற...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_9291.html
பட்டுப் புடவைகளைத் துவைக்கும் போது, அலசும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அலசினால் பட்டுப் புடவையின் நிறம் மங்காது.
கைகளில் ஏதேனும் கறைகள் ஒட்டிக் கொண்டு போக மறுக்கிறதா? உருளைக் கிழங்கைப் பயன்படுத்திப் பாருங்கள். உருளைக் கிழங்கை துண்டாக்கி அதனை கைகளில் தேய்த்து பிறகு சூடான நீர் கொண்டு சோப்பு போட்டுக் கழுவினால் நல்ல பலன் கிட்டும்.
சிங்கில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அதை சுத்தப்படுத்த டிரைன் க்ளீனர்கள் பல்வேறு வகைகளில் விற்கப்படுகிறது. அவற்றை வாங்கி வந்து சிங்கில் ஊற்றிவிட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு சுடுநீரையும் ஊற்றிவிடுங்கள். விரைவில் சுத்தமாகிவிடும்.
தயிரின் கீழ் தங்கிவிடும் தண்ணீரை வீணாக்காமல் ஒரு பிரஷ்ஷை அதில் நனைத்து கறுத்துப்போன உங்கள் வெள்ளி நகைகள், செயின்கள், வளையல்கள், காது தோடுகளை சுத்தப்படுத்துங்கள். பின்னர் ஷாம்பு அல்லது பேஸ்ட் ஏதாவது ஒன்றால் அவற்றை கழுவவும். நகைகள் புதிதாக வாங்கியது போல் மின்னும்.
Post a Comment