பால்கனித் தோட்டம்---விவசாயக்குறிப்புக்கள்

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இரு...

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இருக்க உதவும், மனதிற்கு ஆறுதல் தரும் ஆலயம் இது என்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாகக் காய்கறித் தோட்டம் வளர்ப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உள்ள இந்தத் தம்பதி, இந்தத் தோட்டம் உளவியல் ரீதியாக மனதிற்கு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டில், பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காய்கறித் தோட்டத்தை வளர்த்துவருகின்றனர். வாடகை வீட்டில் தோட்டம் போட முடியுமா? அதற்கு இடமும் நேரமும் இருக்குமா? அதைப் பராமரிப்பது சாத்தியமா? இப்படிப் பல சந்தேகங்களுக்கு அவர்களிடமிருந்து “முடியும்” என்று பதில் வருகிறது. மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்கிறார்கள்.

‘‘எங்க வீட்டு பால்கனித் தோட்டம் பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, வெற்றிலைக் கொடின்னு விதவிதமாக இருக்கு’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் லட்சுமி ஸ்ரீராம், தன் அனுபவத்தையே காய்கறித் தோட்டம் பற்றிய பாடம் ஆக்குகிறார்.

“என்னோட சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசாக இருக்கும்போது, தோட்டத்துல என் பாட்டி வளர்க்கிற கீரையை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. அரைக்கீரை சாப்பிட்டா, இரும்புச் சத்து மாத்திரையே தேவையில்லைன்னு சொல்லி பாட்டி வளர்க்கிற கீரை நல்ல உயரத்துக்கு வரும். அதோட விதையை சேகரிக்க, அதை சாம்பல்ல கலந்து மறுபடியும் விதைப்பாங்க. எதுக்கு பாட்டி சாம்பல்னு கேட்டா அப்பதான் விதையை எறும்பு சாப்பிடாதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.” அந்தப் பாட்டிதான் செடி வளர்க்கும் ஆர்வத்தை இவருக்குள் விதைத்துள்ளார்.

மேற்கொண்டுஅவரிடம்பேசிக் கொண்டிருந்ததில் காய்கறிகள் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

கோடைக் காலத்திற்கு ஏற்ற முறையில் என்னென்ன பயிரிடலாம்?

புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி.

மழைக்காலத்திற்கு?

அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய்

குளிர்காலத்திற்கு?

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய்

மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கும், ப்ளாஸ்டிக் போன்றவற்றில் செடி, கொடி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவதே நல்லது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறும்.

அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்குக் கிடையாது. அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி செடி, கொடிகள் வளர்ச்சி குன்றத் தொடங்கும்.

மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்க்கத் தேவையான வழிமுறைகள் என்ன?

1 பங்கு செம்மண், 3 பங்கு ஆற்று மணல் கலந்த கலவையே செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்ற மண் கலவை. விதை ஊன்றிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இயற்கை உரங்களான ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாகத் தூவலாம்.

மொட்டை மாடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் மண்தொட்டியில் தாவரம் வளர்ப்பதால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?

ஒரு பாதிப்பும் ஏற்படாது. மண் தொட்டியில் செடி, கொடிகள் பயிரிடப்படும்போது, அதிகப்படியான நீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும்.

வாடகை வீட்டில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதில் ஏற்பட்ட அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்?.

பல அனுபவங்கள் உண்டு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி புகும்போது முதலில் நான் பார்க்க விரும்புவது, செடி, கொடி வளர்க்க இடம் கிடைக்குமா? என்பதுதான். வீட்டுச் சொந்தகாரரின் அனுமதி பெற்றுத்தான் காய்கறித் தோட்டம் போடுகிறேன். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்கூல் வ்யூ தெருவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அங்கு மொட்டை மாடியில் 140 மண் தொட்டிகள் வைத்து, காய்கறித் தோட்டம் அமைத்தோம். செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, முட்டை கோஸ், வெற்றிலை என விதவிதமான செடி, கொடிகளை வளர்த்துவந்தோம். வீடு காலி செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலையில், அத்தொட்டிகளை நன்கு பராமரிக்கக்கூடிய சில நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சில தொட்டிகளே வைத்துக்கொள்ள முடிந்தது. மண் தொட்டிகளைப் பிரிய மனம் இடம் கொடுக்க வில்லை. அது மறக்க முடியாத அனுபவம்.

மண் தொட்டியில் செடி, கொடிகள் முழுமையான வளர்ச்சியை அடையாததற்குக் காரணம் என்ன?

நான் தினமும் எழுந்தவுடன் என் வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவேன். வெற்றிலைக் கொடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வேன். பூத்துக் குலுங்கும் மல்லி, ரோஜா இதழ்களைத் தடவிக் கொடுப்பேன். பிஞ்சு விட்டுக்கொண்டிருக்கும் கத்திரி, வெண்டைக் காய்களை முத்தமிடுவேன். இவ்வாறு, நாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளைப் பேரன்புடன், பாதுகாத்துவந்தால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மண் கலவையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் நம் மனம்தான் காரணம். தாவரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிடுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. நம்மைப் போல தாவரத்திற்கும் உயிர், உணர்வுகள் உண்டு.

“ஏன் நீ காய்க்க மாட்டாய்?, ஏன் நீ பூக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்பதை விட, அத் தாவரங்களிடம் புன்னகை செய்யுங்கள். “நீ நன்றாக வளர்வாய்!” என்று வாழ்த்துக்களைச் சொல்லிவாருங்கள். நீண்ட காலம், வளமுடன் இருக்கும். செடி, கொடிகள் நன்கு வளரும்.

----------------------------------------------------------------------------------------------

வீட்டில் வெங்காயம், பூண்டு, தக்காளி, புதினா, கொத்துமல்லி போன்றவை சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் இருந்தால் பால்கனியில் காய்கறிகள் கீரைகள் என எல்லா வகைப் பயிர் வகைகளையும் சிறப்பாக வளர்க்க முடியும். வீட்டுத் தோ ட்டத் தில் எல்லா காய்கறி களும் வளர்க்கலாம் .பால்கனியில் வளர்க்கலாம் .கனம் அதிகம் இல்லாத மண் தொட்டிதான் நல்லது .பிளாஸ்டிக் தொட்டி சிறந்தது. கனம் அதிகம் இல்லாதது .தெ ன்னை நார்க்கழிவு உரத்துடன் தோட்டத்து மண் கலந்து விதைக்கலாம்

--------------------------------------------------------------------------------------------

மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி, தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக், முள்ளங்கி போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும். அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/i2020201a-ea3153ep-abia32020i2039 ----------------------------------------------------------------------------------------------


Related

விவசாயக்குறிப்புக்கள் 1636215603823934058

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item