சருமத்தைக் காக்கும் கற்ப மூலிகை..குப்பைமேனி..

மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே,...

மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும். குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை. மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு. Tamil - Kuppaimeni English - Indian acalypha Telugu - Kuppi-Chettu Malayalam - Kuppa-meni Sanskrit - Arittamajarie Botanical name - Acalypha indica இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது. தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம் உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம் ஞாலங்கொள் மேனியத னால் தேரையர் குணபாடம் பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும். வயிற்றுப் புழுக்கள் நீங்க குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். சொறி, சிரங்கு நீங்க குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும். இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய் யிலயட்டியிலை மேனியை யா அகத்தியர் குணவாகடம் பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும். குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும். குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும். குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும். குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும். மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும். குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. 10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும். குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம். ---------------------------------------------------------------------------------------------- உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.; --------------------------------------------------------------------------------------. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும்.எங்கும் காணப்படுகிறது. இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். . நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும். தோல் நோய் நீக்கும் குப்பைமேனி! மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும். குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும். குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாள்கள் தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும். -------------------------------------------------------------------------------------------- ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பவை. குணமாக்கும் பண்பையுடைய மிளகின் மற்ற குணநலன்களையும் அறிந்துகொள்வோமா...... * ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும். * தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும். * ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும். * பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும். * சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும். ----------------------------------------------------------------------------------------------------------------------- குப்பை மேனி இலையை மைய அரைத்து கடிவாயில் பத்து போட எலிக் கடியின் விஷம் குறையும் ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும். ------------------------------------------------------------------------------------------------------------------- கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது தடவி வர விரைவில் சிரங்கு அகன்றுவிடும். தேள், பூரான், வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் பூசிவர விஷம் முறியும். இலையை கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். வேருடன் குப்பை மேனிச் செடியைப் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப் பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர குடலிலுள்ள தீமை தரும் பூச்சிகள் அழியும். குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர சருமம் முன்பு இருந்த இயல்பானதாக இயல்பு நிலைக்கு வந்துவிடும். ---------------------------------------------------------------------------------------------------------- குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி facial செய்தால் முகம் அழகு கொடுக்கும் ---------------------------------------------------------------------------------------------------------------

Related

மூலிகைகள் கீரைகள் 6363373339630730693

Post a Comment

2 comments

கோமதி அரசு said...

குப்பைமேனியின் பெருமைகளை தெரிந்து கொண்டேன். அருமையான மூலிகை. நன்றி.

MohamedAli said...

அன்பு நெஞ்சம் கோமதி அரசு அவர்கள் கருத்துரைகள் தொடரட்டும் என்றும் அன்புடன் A.S. முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item