மேத்தி ரொட்டி காலிப்ளவ்ர் பீஸ் குருமா--சமையல் குறிப்புகள்
மேத்தி ரொட்டி காலிப்ளவ்ர் பீஸ் குருமா மேத்தி ரொட்டிக்கு தேவையானவை கோதுமைமாவு - அரை கிலோ எண்ணை - 1 மேசைகரண்டி உப்பு - முக்கால் தேக்கரண்டி வெ...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5242.html
மேத்தி ரொட்டி காலிப்ளவ்ர் பீஸ் குருமா
மேத்தி ரொட்டிக்கு தேவையானவை
கோதுமைமாவு - அரை கிலோ
எண்ணை - 1 மேசைகரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
வெந்தயகீரை(மேத்தி) - ஒரு கட்டு
எண்ணை - சுட தேவையான அளவு.
கரம் மசாலா பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
காலிப்ளவர் பீஸ் குருமாவுக்கு.
காலிப்ளவர் - கால் கிலோ
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் தக்காளி - தலா ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி ,புதினா - சிறிது
தேங்காய் பவுடர் - ஒரு மேசை கரண்டி
மிள்காய் தூள் - ஒரு தேக்க்ரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
முந்திரி - 5
தாளிக்க
எண்ணை - நெய் - 1 மேசை கரண்டி
பட்டை,ஏலம், கிராம்பு - தலா ஒன்று
பிரியாணி இலை - ஒன்று சிறியது.
செய்முறை
வெந்தயகீரையை அலசி ஆய்ந்து அத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலா பொடி ,மிளகாய் தூள்,உப்பு,எண்ணை கலந்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
குருமாவுக்கு
காலிப்ளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்து உப்பு கலந்த வெண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி எடுக்கவும்.
எண்ணையை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் அரிந்து சேர்த்து வதக்கவும், வெங்காயம்கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்க்கவும்.
தக்காளி மடங்கியதும் மசாலாவகைகள், உப்பு கலந்து காலிப்ளவரியையும் பட்டாணியையும் சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
கடைசியாக முந்திரியை பொடித்து அத்துடன் தேஙகாய் பவுடர் சேர்த்து மிக்சியில் அரைத்து குருமாவில் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.
ரொட்டிமாவை 10 ரொட்டிகளாக பிரித்து சதுரவடிவ்மாக திரட்டி மாவில் எண்ணை தடவி குறுக்கும் நெடுக்குமாய் சதுரவடிவாக மடித்து மீண்டும் திரட்டி ரொட்டிகளாக சுட்டெடுக்கவும்.
சுவையான மேத்தி ரொட்டியும், காலிப்ளவர் பீஸ் குருமா ரெடி.
Post a Comment