உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள்--உபயோகமான தகவல்கள்

கையில் செல்போனை பிடித்தபடி கார், பைக் ஓட்டுவதை பலர் ஸ்டைலாக நினைத்து தங்களது வாழ்க்கையை நொடியில் தொலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகி...

கையில் செல்போனை பிடித்தபடி கார், பைக் ஓட்டுவதை பலர் ஸ்டைலாக நினைத்து தங்களது வாழ்க்கையை நொடியில் தொலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை காட்டிலும், செல்போன் பேசியபடி வந்து விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு சாலை விபத்து செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் நடப்பதாகவும், இதனால், எதிரே வரும் வாகன ஓட்டிகளும், அவர்களது குடும்பங்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செல்போன் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டாதீர்கள் என்று அரசாங்கமும், போலீசாரும் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. டிரைவிங்கின்போது செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகள்: 1.கார் அல்லது பைக்கில் புறப்படுவதற்கு முன், செல்போனில் வந்துள்ள அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்புவது நல்லது. முக்கியமானவர்களிடம் அவசியம் பேச வேண்டியிருந்தால், பேசிவிட்டு அதன்பிறகு புறப்படுங்கள். 2.காரை ஓட்டிக்கொண்டே எஸ்.எம்.எஸ். எழுதி அனுப்பவதை பலர் குலத்தொழிலாக கொண்டுள்ளனர். இதை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கு மட்டுமல்ல, எதிரில் வருபவருக்கும் நல்லது. 3.டிரைவிங்கின்போது அழைப்புகள் வந்தால் செய்தியை தெரிந்துகொண்டு சுறுக்கமாக பேசி முடித்துவிடுங்கள். எதிர்முனையில் பேசுபவரிடம் டிரைவிங் செய்வதை தெரிவித்துவிடுங்கள். இதனால், அவர் உங்களை தவறாக நினைத்துக்கொள்வதை தவிர்க்கலாம். 4.மோசமான வானிலையின்போது, டிரைவிங் செய்தால் கட்டாயம் செல்போன் பேசுவதை தவிர்ப்பது புத்திசாலித்தனம். இதுபோன்ற சூழ்நிலைகளில் கவனம் சிதறினால், நொடியில் மரணம் ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது. 5.அலுவலகம் மற்றும் வீட்டில் இருப்பவர்களின் நம்பர்களை ஒன்-டச் டயல் ஆப்சனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். டிரைவிங்கின்போது அவசரமாக பேசும் சூழ்நிலை இருந்தால் உதவிகரமாக இருக்கும். 6.டிரைவிங்கின்போது செல்போனை எளிதாக எடுக்கும் வகையில், டேஷ்-போர்டில் கண்ணுக்கு எதிரில் படும்படியாகவோ அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொள்ளுங்கள். 7.வாய்ஸ்-மெயில் மோடில் செல்போன் இருந்தால், அனைத்து அழைப்புகளையும் நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். 8.டிரைவிங்கின்போது அவசியம் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால், சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு பேச முற்படுங்கள். இயலாத நேரத்தில் ஹேண்ட்-ப்ரீ மற்றும் ஹேட்போன் ஆகியவற்றை பயன்படுத்தி சுறுக்கமாக பேசிமுடித்துவிடுங்கள். 9.அழைப்பு ஏதும் வந்தால், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு வழவழ என்று பேசிக்கொண்டு நிற்காதீர்.விபத்துக்களும், மரணங்களும் எதிர்பாராமல் நடப்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் அதற்கு முக்கிய காரணம் நாமாகிவிடக்கூடாது என்பதை அனைவரும் முதலில் உணரவேண்டும். மேலும், டிரைவிங்கின்போது செல்போன் பேசுவதற்கு சில வழிமுறைகளை இருந்தாலும், அவை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்குத்தான். டிரைவிங் செய்யும்போது செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

Related

ஃப்ரிட்ஜ் - கூல்! கூல்!---உபயோகமான தகவல்கள்,

ஃப்ரிட்ஜ் - கூல்! கூல்! அத்தியாவசிய வீட்டுச் சாதனங்களில் ஒன்றாகிவிட்டது ஃப்ரிட்ஜ். சரி, ஃப்ரிட்ஜை முறையாக, முழுமையாக எப்படிப் பயன்படுத்துவது என்று  தெரிந்துகொள்ளலாமா? 'நம் ஊரின் அ...

எப்படி செல் பேசுவது?--உபயோகமான தகவல்கள்,

 எப்படி செல் பேசுவது? ''செல்போன் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஸ்வீடன் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் ஆய்வின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாகசெல்ப...

நாற்பதிலும் நலம்!--ஹெல்த் ஸ்பெஷல்,

நாற்பதிலும் நலம்! நாற்பது வயதில் நாய்க் குணம் என்று நம் ஊரில் சொல்வதை, மருத்துவ உலகம் 'மிட்லைஃப் ப்ளூஸ்’, 'மிட் லைஃப் கிரைசிஸ்’ என்று பல அடைமொழிகளைக் கொடுத்து வர்ணிக்கிறது. இந்தப் பருவத்தில் ஒவ...

Post a Comment

1 comment

கோமதி அரசு said...

அருமையான் யோசனைகள் பெட்டகத்திலிருந்து.

இதன் படி நடந்தாலே விபத்துக்கள் நடைபெறாது.
நன்றி.

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 7:20:24 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,206

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item