கொய்யாப்பழம் மூலம் ஜாம் எப்படி செய்வது என்கிற ரெஸிபி---பழங்களின் பயன்கள்
தேவையான பொருட்கள் : நன்கு முற்றிய 10 அல்லது 12 கொய்யாப்பழங்கள், சர்க்கரை 750 கிராம், சிவப்பு நிற கலர்ப்பவுடர் 1 டேபிள்ஸ்பூன் தேவையான அள...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6400.html
தேவையான பொருட்கள் : நன்கு முற்றிய 10 அல்லது 12 கொய்யாப்பழங்கள், சர்க்கரை 750 கிராம், சிவப்பு நிற கலர்ப்பவுடர் 1 டேபிள்ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை: 10,12 எண்ணிக்கையுள்ள கொய்யாப் பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் பிறகு அவைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின்பு அதிலுள்ள விதைகளை நீக்கி விடவேண்டும் ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை தேவையான அளவுக்கு (சுமார் 1 அல்லது ½ டம்ளர் ) நன்கு சூடு படுத்த வேண்டும் நன்கு கொதித்த நீரில் சேர்ந்து பேஸ்ட் போன்ற பதத்துக்கு வரும். மேலும் தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் இப்போது சர்க்கரையை (சுமார் கால் கிலோ )சேர்த்து கிளற வேண்டும் இப்போது குறைவான தீ கொடுத்து பாத்திரத்திலுள்ள கொய்யா சர்க்கரை போன்றவை ஜாம் போன்ற பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும் பிறகு பதம் வந்த ஜாமுடன் ரெட் கலர் பவுடரைத் தூவி கலக்க வேண்டும் கலக்க கலக்க ஒரு சுகந்தமான நறுமணம் வருவதை உணர்வீர்கள் இவ்வாறு தயாரித்து முடித்த சிவப்பு நிற கொய்யா ஜாமை குளிமைப்படுத்தி சப்பாத்தி பிரட் போன்ற உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடலாம் இதன் ருசியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
Post a Comment