உங்கள் வீட்டு குளிர்பதனப் பெட்டி--வீட்டுக்குறிப்புக்கள்
குளிர்பதனப் பெட்டியை சுவற்றை ஒட்டி வைக்கக் கூடாது. சுவரில் இருந்து அரையடி தூரமாவது இடைவெளி விட்டு வைக்க வேண்டும். சுடச்சுட எந்த பொருளையும்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_206.html
குளிர்பதனப் பெட்டியை சுவற்றை ஒட்டி வைக்கக் கூடாது. சுவரில் இருந்து அரையடி தூரமாவது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
சுடச்சுட எந்த பொருளையும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை உருளைக் கிழங்கு மீது தெளித்து அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து உப்பு போட்டு ஒரு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் அது ஒரு வாரம்வரை வைத்திருந்து குழம்பு,ரசம், ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.
முருங்கைக்காயை நறுக்கி பிளாஸ்டிக் கவரில் சிறு துளைகள் போட்டு, பிரிஜ்ஜில் வைக்கவும். முருங்கைக்காய் 8 முதல் 10 நாள் வரை அப்படியே இருக்கும்.
Post a Comment