பூண்டு முட்டை சாதம் (கர்ப்பிணி பெண்களுக்கு) ---சமையல் குறிப்புகள்
பூண்டு முட்டை சாதம் (கர்ப்பிணி பெண்களுக்கு) இது கர்ப்பிணி பெண்களுக்கு 9 மாதம் ஆரம்பித்ததும் தினம் இந்த சாதத்தை செய்து குழந்தை பெறும் வரை ச...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3906.html
பூண்டு முட்டை சாதம் (கர்ப்பிணி பெண்களுக்கு)
இது கர்ப்பிணி பெண்களுக்கு 9 மாதம் ஆரம்பித்ததும் தினம் இந்த சாதத்தை செய்து குழந்தை பெறும் வரை செய்து கொடுத்தால் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி சுகப்பிரசம் ஆகும்.
தேவையானவை
சாதம் - ஒரு கோப்பை
முட்டை - இரண்டு
பூண்டு - 8 பல் (பெரியது)
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிது
சின்ன வெங்காயம் - 5
நல்லெண்ணை - ஒரு குழிகரண்டி
செய்முறை
1.முட்டையை நன்கு அடித்து அதில் மிளகு தூள் பொடித்து உப்பு ,பாதி சீரகம் சேர்த்து அடித்து வைக்கவும்.
.2..நல்லெண்ணையை காயவைத்து அதில் சீரகம் சேர்த்து (ஒன்றும் பாதியுமாய் பொடித்தது) பூண்டை பொடியாக அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
3..சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.. வதங்கிய வெங்காயத்தில் கலக்கி வைத்துள்ள முட்டையை பரவலாக ஊற்றி சமப்படுத்தவும்.
5. முட்டையை தோசை போல் சுட்டெடுக்கவும்
6 . வெந்ததும் எடுத்து வைத்திருந்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
சுவையான பூண்டு முட்டை சாதம் ரெடி
குறிப்பு
( இது கர்ப்பிணி பெண்களுக்கு 9 மாதம் சுகப்பிரசம் ஆக தினம் குழந்தை பெறும் வரை செய்து கொடுக்க்கும் சாதம். மற்றவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் இதில் பச்சமிளகாய், மிளகாய் தூள்,நல்லெண்ணைக்கு பதில் சாதா எண்ணை சேர்த்து அவசர லன்ச் பாக்ஸுக்கு ஈசியாக எடுத்து செல்லலாம், குழந்தைகளுக்கு பச்ச மிளகாய் சேர்க்க வேண்டாம் பட்டர் ( அ) நெய்யில் செய்து கொடுக்கலாம்.) பிள்ளை பெறும் நேரத்தில் தெம்புக்கு முட்டை கொடுப்பார்கள், அதோடு பூண்டு , மிளகு சீரகம் சேருவதால் ஒன்றும் ஆகாது, இது 9 மாதத்தில் கொடுக்க ஆரம்பித்தால் முதல் வார கடைசியிலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ குழந்தை பிறந்துவிடும். அதை வைத்து தான் அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்லி இருக்காங்க. தினம் சாப்பிட ஒத்துகொள்ளவில்லை என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம்.
Post a Comment