தன்னம்பிக்கைக்கு 7 எளிய வழிகள்.! பெட்டகம் சிந்தனை

உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ ஏழு எளிய வழிகள்...! 1 நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அ...

உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ ஏழு எளிய வழிகள்...! 1 நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். விரைவாகவே அதன் பயனை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். எந்திரம்போல் எப்போதும் வேலை வேலை என்று அலையாமல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத்தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும் தன்னம்பிக்கையும் ஏற்படும். 2 உங்கள் மேனியழகு, உங்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கையை முழுமையாக மலரச் செய்யும். அதற்காக தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங் கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இனிப்பு பலகாரங்கள், கொழுப்புச்சத்துள்ள எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து புரோட்டீன் சத்து மிதமாக உள்ள உணவுவகைகளைத்தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இரவில் நன்றாக தூங்குங்கள். 3 உங்கள் முகத்திற்கும் மேனிக்கும் பொருத்தமான அழகுசாதன பொருட்களை மிதமாக பயன்படுத்துங்கள். அழகு உங்களை மகிழ்ச்சி நிறைந்த வராக மாற்றும். 4 உங்களிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர்சுட்டிக்காட்டும் முன்பு நீங்களே அறிந்து, அவைகளை அகற்றும் வழிகளை ஆராய்ந்து வெற்றிகாணுங்கள். உங்கள்தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். இப்படிச் செய்தால் தடைக் கற்கள் வெற்றி யின் படிக்கட்டுகளாக மாறுவதை உணர்வீர்கள். 5 உங்கள் சொந்தவாழ்க்கை, தொழில், வியாபாரம், பணத் தேவை போன்ற அனைத்தையும் பற்றி முதலிலே ஒரு செயல்திட்டம் வகுத்துவிடுங்கள். அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலம் வளமாக அமையும். வளமான வாழ்க்கை தன்னம்பிக்கையை வளர்க்கும். 6 வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓடவேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்களில் டென்ஷன் ஆனாலும் பரவாயில்லை.கொஞ்சம் `ரிஸ்க்' எடுங்கள்.ரிஸ்க்கான விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும்போது உங்களிடம் தைரியம் பிறக்கும். 7 உங்களை நீங்கள் நம்புங்கள்...! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள். நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்...!

Related

பெட்டகம் சிந்தனை 4426575694554790922

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item