குளிர்சாதனப் பெட்டி என்பது நமக்கு, அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய வரப்பிரசாதம். இன்றைய அவசர உலகில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் ...

குளிர்சாதனப் பெட்டி என்பது நமக்கு, அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய வரப்பிரசாதம். இன்றைய அவசர உலகில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் காலத்தில் பிரிஜ், அனைவருக்குமே உற்ற தோழனாக விளங்குகிறது. அப்படிப்பட்ட பிரிஜ்ஜை நாம் எப்படி வைத்திருக்கிறோம். அதில் என்னவெல்லாம் செய்யக்கூடாது... என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டிப்ஸ்...
* சாம்பார், பருப்பு, கிழங்கு வகைகளில் செய்த உணவுகம் மற்றும் முட்டை உணவுகளை சமைத்தபின்னர், அதை பிரிஜ்ஜில் உள்ளே பிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அந்தக் குழம்பின் சுவை, தரம் மாறிவிடும்.
* ஒருமுறை பிரீசரில் வைத்து எடுத்த உணவை, சமைத்த பின்னர் மீண்டும் பிரீசரில் வைத்தால் கெட்டு விடும்.
* உணவுப் பொருட்கம் அனைத்தையும் ஒன்றாக கலந்திருக்குமாறு பிரிஜ்ஜில் வைக்கக்கூடாது. தனித்தனியாக பிரித்து பாலித்தீன் கவர்களில் வைத்து மூடி வைக்கவும்.
* சமைத்த உணவு அதிகமாக இருந்தால், அதை தனித் தனியாக பிரித்து பிரீசரில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக, எடுத்து சூடுபடுத்தி சாப்பிடலாம்.
* பிரிஜ்ஜில் உணவுப் பொருட்களை வைக்கும்போது, சின்ன டப்பாக்களை பயன்படுத்தினால் இடம் அடைக்காமல் இருக்கும்.
* வாரத்துக்கு ஒருமுறை பிரிஜ்ஜை நன்றாக சுத்தம் செய்யவும். சுத்தமான துணியை நீரில் நனைத்து துடைத்தால் போதும்.
* துடைத்த பிறகு, பிரிஜ்ஜூக்குள் பாதி எலுமிச்சம் பழத்தை வைத்தால் கெட்டவாடை இருக்காது.
* பிரிஜ்ஜூக்குள் வைக்கப்படும் சமைத்த உணவுகள் இரண்டு நாட்களுக்கு கெடாமல் இருக்கும். ஆனால் ஒரு முறை எடுத்து சூடுபடுத்திய உணவை மீண்டும் பிரிஜ்ஜூக்குள் வைக்கக்கூடாது. தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி சாப்பிடலாம்.
* எந்தப் பொருளை பிரிஜ்ஜூக்குள் வைத்தாலும், அதை முறைப்படி வைத்தால் எளிதாக பயன்படுத்தலாம். உதாரணமாக கொத்தமல்லி, கறிவேப்பிலையை வைக்கும்போது, அவற்றை நன்றாக ஆய்ந்து, பிளாஸ்டிக் கவர்களில் வைத்தால் அடுத்த நாம் அப்படியே எடுத்து பயன்படுத்தலாம்.
* ஒவ்வொரு பொருளையும் எங்கெங்கே வைப்பது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளுக்கு என்று தனிப்பெட்டி இருக்கும். அதில் வைக்கலாம். முட்டை, இறைச்சி, சாஸ் பாட்டில், ஊறுகாய் ஆகியவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது நல்லது.
Post a Comment