சமையலரை ரகசியம்....டிப்ஸ்!
வெங்காயம், உருளைக்கிழங்கு ரகசியம்... வெங்காயமும், உருளைக்கிழங்கையும் ஒரு போதும் சேர்த்து வைக்கவேண்டாம். சீக்கிரமே கெட்டு போகும். நல்ல திறந்...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_1284.html
வெங்காயம், உருளைக்கிழங்கு ரகசியம்...
வெங்காயமும், உருளைக்கிழங்கையும் ஒரு போதும் சேர்த்து வைக்கவேண்டாம். சீக்கிரமே கெட்டு போகும்.
நல்ல திறந்த இடத்தில் உருளை, வெங்காய பாஸ்கெட் வைக்கவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
*********************************************************************
ஊறுகாய் தொக்கு மீதமிருந்தால்
ஊறுகாய் தீர்ந்து போய் அந்த தொக்கு மிதமிருந்தால் அதில்
கேரட்,கேபேஜ்,வெங்காயம், போன்றவற்றை துருவியோ அல்லது
சிறு துண்டுகளாக்கி போட்டு 20 நிமிடம் கழிந்து
சாப்பிட நல்ல ஊறுக்காய் ரெடி.
சின்ன வெங்காயம், துறுவிய கேரட், வதக்கிய பூண்டு இவற்றை இந்த தொக்கில்
போட்டு சாப்பிட்டால் நல்ல டேஸ்டி ஊறுகாய்.
**************************************************************************************
பொரியல் மீதமானல்
பொரியல் மீதமாகிவிட்டால் அதில் கொஞ்சம் கடலை மாவு,அரிசிமாவு,வெங்காயம்,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை,உப்பு சேர்த்து பக்கோடவாக பயன்படுத்த்லாமே?
**********************************************************************************
பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
******************************************************************************
போண்டா,வடை மீதமானல்
போண்டா,வடை மீதமாகிவிட்டால். அதை மைக்ரோவேவ் அல்லது கடாயில் போட்டு சூடாக்கி உதிர்த்து எண்ணெய் விட்டு வதக்கி குருமா குழம்பாக செய்யலாம்.சுவை நன்றாக இருக்கும்.
***************************************************************************************
மீன் குழம்பு மணமணக்க...
மீன் குழம்பு வைக்கும்போது முதலில் வெரும் சட்டியில் வெந்தயத்தை வருத்துக்கொண்டு பின் அதிலேயே குழம்புசெய்தால் குழம்பு மணமும் சுவையுமாக இருக்கும்
*************************************************************************************
Post a Comment