சென்னை வடகறி--சமையல் குறிப்புகள்

சென்னை வடகறி தேவையான பொருட்கள் : - கடலைப்பருப்பு - ஒரு கோப்பை வெங்காயம் - நான்கு தக்காளி - ஒன்று துருவிய தேங்காய் - ஒரு கோப்பை பச...

சென்னை வடகறி தேவையான பொருட்கள் : - கடலைப்பருப்பு - ஒரு கோப்பை வெங்காயம் - நான்கு தக்காளி - ஒன்று துருவிய தேங்காய் - ஒரு கோப்பை பச்சைமிளகாய் - ஆறு நசுக்கிய முழு பூண்டு - ஒன்று இஞ்சி - இரண்டு துண்டு மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு - இரண்டு தேக்கரண்டி கடுகு - அரைதேக்கரண்டி பட்டை - இரண்டு துண்டு ஏலக்காய் - நான்கு கிராம்பு - நான்கு பிரிஞ்சி இலை - இரண்டு எண்ணெய் - முக்கால் கோப்பை உப்பு - இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி - ஒரு பிடி செய்முறை : - கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காய்ப்பூவில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து மைய்ய அரைத்து திக்கான பாலாக வடித்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கிலும், பச்சை மிளகாயில் நான்கை மட்டும் மெல்லியதாகவும் நறுக்கி வைக்கவும். பூண்டை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். ஊறிய பருப்புடன் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், அரைத்தேக்கரண்டி உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு ஆறிய பின்பு கட்டியும் தட்டியுமாக உதிர்த்துக் கொள்ளவும். பிறகு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள, வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். அதைத் தொடர்ந்து நறுக்கின தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காய்ப் பால் மற்றும் மூன்று கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைகோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த அனலில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும். இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.

Related

சமையல் குறிப்புகள் 6841874953489507901

Post a Comment

2 comments

கோவி.கண்ணன் said...

இந்தவார இறுதியில் செய்து பார்த்துவிடுகிறேன்

MohamedAli said...

அன்பிற்கினிய நண்பர் சிங்கை கோவி. கண்ணன் அவர்களுக்கு அன்புடன் நண்பர் A.S. முஹம்மது அலி எழுதும் மின் மடல். தாங்கள் எனது www.pettagum.blogspot.com பார்த்து தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நன்றிகள்! தங்களின் பிளாக் பார்வையிட்டேன் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருந்தது. தொடர்ந்து தொடர்பில் இருக்க விழைகின்றேன். அன்புடன் A.S.முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item