இனிப்பு தோசை--சமையல் குறிப்பு
இனிப்பு தோசை தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் வெல்லம் - ஒரு கப் சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன் ஏலப்பொடி - 1...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_479.html
இனிப்பு தோசை
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெல்லம் - ஒரு கப்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 12 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, சுக்குப்பொடி, ஏலப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* வெல்லத்தை அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* கொதித்த வெல்ல நீரை ஒரு உலோக வடிகட்டியில் தூசு நீங்க வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* கலந்து வைத்துள்ள மாவுகளுடன் வடிகட்டிய வெல்ல நீரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து வழக்கம்போல தோசை சுட்டு எடுக்கலாம். தோசை மாவை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வேக விட வேண்டும்.
குறிப்பு
* சுக்குப்பொடி சேர்ப்பது வெல்ல தோசைக்கு ஒரு தனி மணத்தை தருவதோடு உடலுக்கும் நன்மை பயக்கும்.
* எண்ணெய்க்கு பதிலாக நெய் உபயோகித்தும் இந்த உணவு வகையைச் செய்யலாம். ருசி கூடுதலாக இருக்கும்.
* இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள சைடு டிஷ் எதுவுமே தேவையில்லை.
**************************************************************************
Post a Comment