காடை குருமா--சமையல் குறிப்புகள்
காடை குருமா தேவையானப் பொருட்கள் காடை - 3 வெங்காயம் - 1 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_21.html
காடை குருமா
தேவையானப் பொருட்கள்
காடை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மசாலா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 கொத்து
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிராம்பு, ஏலக்காய் - தலா 1
பட்டை - சிறிய துண்டு
செய்முறை:
காடையை சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி ஒன்றாக மிக்ஸியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.
மிளகாயை இரண்டாக வெட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டை போட்டு வதக்கி, அத்துடன் தயிர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து பிரட்டிவிடவும்.
அதன் பிறகு நறுக்கின காடை துண்டங்களைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
கறி நன்கு வெந்தவுடன் மேலே நறுக்கின கொத்தமல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.
Post a Comment